தியேட்டரே அலறுது.. வின்டேஜ் ரஜினி.. கூலி எப்படி இருக்கு?.. இதோ அவரது விமர்சனம்.. ஓபனா உடைச்சிட்டாரு
சென்னை: ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்திருக்கிறார்கள். தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தை பற்றி விமர்சனங்களும் ஒவ்வொன்றாக வர தொடங்கியிருக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜை இயக்குநராக ஃபிக்ஸ் செய்து; ரஜினியை ஹீரோவாக்கி கூலி படத்தை ஆரம்பித்தது அந்த நிறுவனம். அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்தப் படம் பற்றிய பேச்சுக்கள் அதிகம் இருந்தன. ஏனெனில் உச்ச நடிகரும், இதுவரை தோல்வியே சந்திக்காத லோகேஷும் இணைந்திருந்ததால்.
படம் ரிலீஸ்: படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. டிக்கெட் புக்கிங் எல்லாம் ஜோராக நடந்து முடிந்தன. சொன்னபடி இன்று உலகம் முழுவதும் 5,000 திரைகளில் படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து திரையரங்குகளுக்கு சென்றார்கள். தியேட்டர்களுக்கு வெளியே ரஜினிக்கு வைக்கப்பட்டிருந்த பேனருக்கு பாலாபிஷேகம் போன்ற செயல்களையும் செய்ய தவறவில்லை அவர்கள்.
எப்படி இருக்கு படம்?: ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்களுக்கு படம் ஃபுல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சீனையும் கொண்டாடி தீர்க்கிறார்கள். கண்டிப்பாக தரமான ஹிட் என்று பேசுகிறார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களை படம் கவரவில்லை. ஸ்க்ரீன்ப்ளே எல்லாம் ரொம்பவே மோசம் என்று நெகட்டிவ் விமர்சனத்தை கொடுக்கிறார்கள். ஆக முதல் காட்சி முடிந்தவுடனேயே படம் சுமார் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.

செய்யாறு பாலு விமர்சனம்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூலி படம் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், "நண்பனுக்காக ரஜினி பழிவாங்குவதுதான் கதை. இதை சொல்வதற்கு ஈசியாக இருக்கலாம். ஆனால் லோகேஷ் பின்னியெடுத்துவிட்டார். ஒரு ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வுதான் வந்தது. ரஜினியின் நடிப்பெல்லாம் வேற லெவல்.
நிறைய சஸ்பென்ஸ்: படத்தில் நிறைய சஸ்பென்ஸ்கள் இருக்கின்றன. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன. நாகார்ஜுனா அவ்வளவு ஸ்டைலிஷாக இருக்கிறார். சௌபின் சாஹிரும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அமீர் கான் வரும் இடமெல்லாம் அருமையாக இருக்கும். படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்டால்; இருக்கிறதுதான். படத்தில் லாஜிக் மீறல்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு பார்க்க வேண்டும். ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு படம் திருப்தியை கொடுத்திருக்கிறது. ஹார்பரை அவ்வளவு நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அனிருத்தின் இசையும் அட்டகாசமாக படத்துக்கு உதவியிருக்கிறது" என புகழ்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











