‘விடாமுயற்சி’யில் ஆர்வமே இல்லாத அஜித்.. கடுப்பில் மகிழ் திருமேனி.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : விடாமுயற்சி படத்தில் நடிக்க ஆர்வமே இல்லாமல் அஜித் இருப்பதாக செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு இந்ததாண்டு பொங்கலுக்கு வெளியானது. இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்தது.

விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

Cheyyaru Balu has said in an interview that Ajith is not interested in acting

விடாமுயற்சி என்னாச்சு : விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என அனைவரும் எதிர் எதிர்பார்த்த நிலையில், கிணற்றில் போட்ட கல் போல படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. மேலும் படத்தின் படப்பிடிப்பும் இன்னும் துவங்கப்படாமல் தாமதமாகிக்கொண்டே செல்வதால் சிலர் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.

வேலையே நடக்கல : இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செய்யாறு பாலு, விடாமுயற்சி படம் குறித்து பல விஷயத்தில் பேசி உள்ளார். அதில், அஜித் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு மகிழ் திருமேனி இயக்குவார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக பூனாவில் செட் அமைக்கும் நடந்து கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், எதுபோன்ற எந்த வேலையும் தற்போது வரை தொடங்கப்பட வில்லை.

ஆர்வமே இல்லா அஜீத் : மேலும், இயக்குநர் மகிழ் திருமேனி கொடுத்த ஒன் லைன் கதையை அஜித் இதுவரை படித்துக்கூட பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அஜித்திற்கு மகிழ் திருமேனியின் கதை பிடிக்கவில்லையா, இல்லை நடிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதா என்பது தெரியவில்லை. லண்டனில் இருக்கும் அஜித் திரும்பிவந்த பிறகுதான் விடாமுயற்சி படத்தின் நிலை என்ன என்பது தெரியவரும்.

தயாரிப்பு நிறுவனம் : மேலும், அஜித் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாகவும், அதில் ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் போன்ற இந்தியாவில் உள்ள முக்கியமான விஷயத்தை டாக்குமெண்டரி திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், விடாமுயற்சி திரைப்படம் ட்ராப்பாகி விடுமா? இல்லை தொடருமா? என்பது தெரியவில்லை.

டென்ஷனில் இயக்குநர் : அஜித்தை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க லைகா தயாராக இருக்கிறது, கதையும் தயாராகி விட்டது. ஆனால், அஜித் இதில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாதால், மகிழ் திருமேனி உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். விடாமுயற்சி வருமா வராதா என்பது போன்ற பல கேள்விகளுக்கு அஜித் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், அவர் எப்போது பதில் சொல்லுவார் என்பது தெரியவில்லை என அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவலை செய்யாறு பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X