Leo - லியோ படம் பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை.. அப்செட்டான படக்குழு.. செய்யாறு பாலு பேட்டி

சென்னை: Rajini (ரஜினி) லியோ படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன வார்த்தையால் ஒட்டுமொத்த படக்குழுவும் அப்செட் ஆகியிருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

Cheyyaru Balu has said that Rajini did not like the film Leo

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தார். அந்த வைபோடு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. அதிலும் இது லோகேஷ் கனகராஜின் படம் போன்றே இல்லை என்ற கருத்துக்களும் எழுந்திருக்கின்றன.

முதல் சறுக்கல்: லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே கண்டிப்பாக ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே லியோவுக்கு முன்னர்வரை இருந்தது. ஆனால் லியோ படத்தில் லோகேஷின் மேக்கிங்கும், அவர் பிடித்திருந்த கதைக்களமும் சொதப்பியதால் அவருக்கு இது முதல் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் லோகேஷ் புதிதாக எதையுமே படத்தில் யோசிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

அடுத்த படம்: சூழல் இப்படி இருக்க அவர் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரலில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என லோகேஷ் அறிவித்திருக்கிறார். லியோவில் வாங்கிய அடிக்கு தலைவர் 171ஐ வைத்து மருந்திட்டுக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

ரஜினி சொன்ன வார்த்தை: இந்த சூழலில் லியோ படத்தை பார்த்த ரஜினிகாந்த் சொன்ன வார்த்தையால் ஒட்டுமொத்த படக்குழுவும் அப்செட்டாகி இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "யார் நல்ல படம் எடுத்தாலும் அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்ல் நேரில் வரவழைத்து அவர்களுடம் புகைப்படமும் எடுத்துக்கொள்பவர் ரஜினிகாந்த்.

Cheyyaru Balu has said that Rajini did not like the film Leo

இதில் இல்லை: ஆனால் லியோ படத்தை பார்த்த ரஜினிகாந்த் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் புரொடக்‌ஷன் வேல்யூ அதிகம் இருக்கும்போல என மட்டும்தான் சொல்லியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது என்றோ இல்லை படத்தில் இந்தந்த விஷயங்கள் நன்றாக இருக்கிறது என்றோ சொல்லவில்லை. இத்தனைக்கும் லோகேஷ் கனகராஜ்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.

Cheyyaru Balu has said that Rajini did not like the film Leo

இருந்தாலும் படத்தில் சிறப்பம்சங்கள் இருக்கின்றன என அவர் ஒருவார்த்தைக்கூட சொல்லாதது லியோ படக்குழுவை ரொம்பவே அப்செட்டில் தள்ளியிருக்கிறது. உண்மையில் ரஜினிக்கு படம் பிடித்திருந்தால் இயக்குநர், தயாரிப்பாளர், அனிருத் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி ஒரு புகைப்படத்தை எடுத்திருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X