Mask Review: சோப்புலாங்கி வில்லன்.. குழப்பான ஹீரோ.. 'மாஸ்க்' செய்யாறு பாலு விமர்சனம்!

சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார் கவின். இவரின் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான மாஸ்க் திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார். ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதை என்னவென்றால் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் என்றால், எப்படியாவது சம்பாதித்து பெரிய ஆளாகி விட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் பிரைவேட் நிறுவனத்தில் டிடெக்டிவாக இருக்கிறார் படத்தின் நாயகன் கவின். சமூக சேவையாக ஆண்ட்ரியாக இருக்கிறார். சிஎம் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார் பவன். இப்படி மூன்று பேருக்குள் நடக்கின்ற விஷயத்தை படத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் படத்தின் இயக்குநர். 446 கோடி பணம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் ஏன் வந்தது? அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? அந்த பணம் கிடைத்ததா? கொள்ளையடிக்கப்பட்ட பணத்திற்கும் இவர்கள் மூன்று பேருக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் மாஸ்க் திரைப்படத்தின் கதை.

Mask Kavin Cheyyaru balu
Photo Credit:

செய்யாறு பாலு விமர்சனம்: மாஸ்க் திரைப்படத்தின் ஒன் லைன், மிகவும் ரசிக்கும் படி அருமையான திரை கதையாகத்தான் இருக்கிறது. ஆனால், கதையின் ஓட்டம் செல்ல செல்ல கதை எதை நோக்கி செல்கிறது என்று ஆடியன்ஸ்க்கு புரியவில்லை. ஆண்ட்ரியா நல்லவரா? இல்லை கெட்டவரா? அவருடைய நோக்கம் என்ன? படத்தின் நாயகன் கவினின் எண்ணம் என்ன? அவருக்கு வேறு ஏதும் கதை இருக்கிறதா? என்று எதுவுமே புரியாமலே கதை நகர்வதால் முதல் பாதியிலேயே ஆடியன் சோர்வாகி விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கதை சூடு பிடித்து கட்டுக்கடங்காத வேகத்தில் ஓடுகிறது. ஆனால், படம் பார்க்கும் ஆடியன்ஸ் ஒன்றுமே புரியாமல் 'என்னய்யா செய்து வெச்சி இருக்கீங்க என்ற கேள்வி எழுகிறது.

என்னய்யா இது: கவின் வழக்கம்போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இன்னும் நடிப்பில் மெனக்கெட வேண்டும். மாஸ்க் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆண்ட்ரியா, சிறப்பாக நடித்து இருக்கிறார் என படம் பார்த்துவிட்டு பலர் ஆண்ட்ரியா பாராட்டினார்கள். ஆனால், எனக்கு ஆண்ட்ரியா இன்னும் இறங்கி நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஆண்ட்ரியா ஒவர் ஆக்டிங் செய்து இருக்கலாமே என்று தோன்றுகிறது. படத்தில் பெயருக்கு என்று ஒரு வில்லன் இருக்கிறார். அவர் ஒரு சோப்புலாங்கி போல இருக்கிறார். இவர் தான் வில்லானா என நம்மை யோகிக்க வைக்கிறது.

அதே படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். படத்தின் எந்த இடத்திலும் ஜிவியின் இசை போலவே தெரியல்லை. ஏதாவது கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு இசையமைத்தாரா என்று சொல்லும் அளவிற்கு படத்தின் இசை மனதில் ஒட்டவே இல்லை. இந்த வாரம் தியேட்டரில் வெளியான திரைப்படங்களில் மாஸ்க் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். ஆனால், அந்த திரைப்படம் என்னை அவ்வளவாக திருப்தி படுத்தவில்லை என செய்யாறு பாலு, விமர்சனத்தில் பேசி இருக்கிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X