மனசு நொந்த அப்பாஸ்.. நாட்டை விட்டே ஓடிவிட்டார்.. செய்யாறு பாலு சொன்ன அந்த விஷயம்!
சென்னை: தமிழ் சினிமாவின் அஜித்,கமல் ஹாசன், ரஜினி என பல டாப் நடிகர்களுடன் நடித்தவர் நடிகர் அப்பாஸ். பெண் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்த இவர் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், திடீரென பட வாய்ப்புகள் குறைந்துபோக இங்கே இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு காணாமல் போனார்.
நடிகர் அப்பாஸ் குறித்து, செய்யாறு பாலு,Agayam சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அப்பாஸ் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தார். அப்போது தான் அவருக்கு காதல் தேசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானார். அதன்பிறகு பல திரைப்படத்தில் வெவ்வேறு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். பல நல்ல படத்தில் நடித்தாலும் ஹீரோவாக நடிக்காமல் இரண்டாவது ஹீரோவாகவே நடித்து வந்தார்.

படவாய்ப்பு இல்லை: உலக அழகி ஐஸ்வர்யா கூட யார் நடிப்பது என்ற, சண்டை நடந்து கொண்டு இருக்கும் போதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் காதலனாக நடித்தார். அப்பாஸ் தொடர்ந்த பல படத்தில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தால், அவரால் ஜெயிக்க முடியவில்லை. விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு அவரது அப்பா இருந்தார்,அதே போல பிரசாந்த்,ஜீவா, சூர்யா, கார்த்திக் என பல நடிகர்களுக்கு சினிமா பின்புலத்தோடு தான் சினிமாவிற்கு வந்தார்கள். ஆனால், அப்பாசுக்கு அது போன்று பின்புலம் இல்லாததால் இவரால் பிரகாசிக்க முடியாமல் போனது.
பெட்ரோல் பங்கில் வேலை: நடிகராக வாழ்ந்து விட்டால், அதை அப்படியே மெயிண்டன் செய்ய வேண்டும். அடுத்தடுத்து பட வாய்ப்பு இருக்கும் போது, ஆடம்பரமாக காரில் வந்த அப்பாஸ், வாய்ப்பு குறைய குறைய அந்த காரை எல்லாம் விற்றுவிட்டு சாதாரண காரில் வந்துள்ளார். நம்மை ஒரு மெட்டீரியலாகத்தான் பார்த்து இருக்கிறார்கள் ஒரு மனுஷனாக பார்க்கவில்லை என்று நினைத்து நோந்து போனார் அப்பாஸ். அப்போது அவருடைய நண்பர், இனி இங்கே இருக்காதே நியூசிலாந்துக்கு வந்துவிடு, இங்கே ஏதாவது ஒரு வேலை பார்த்து சம்பாதித்து கொல்லலாம் எனறு சொல்லிய பிறகு தான் குடும்பத்தோடு நியூசிலாந்து சென்று, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அந்த வீடியோ எல்லாம் இணையத்தில் வெளியான போது அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











