காசுக்கு ஆசைப்பட்டு ரம்பா கணவர் செய்த மோசடி..புட்டு புட்டு வைத்த பிரபலம்!

சென்னை: பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழாவும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த விழாவை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு செய்திருந்தார். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு முக்கிய காரணம் ரம்பாவின் கணவர் தான் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

திறந்த வெளி அரங்கில் நடந்த விழாவில், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருந்தவர்களுக்கு முன் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இலவசமாக பார்க்கும் வகையில் பின் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில், தடுப்பை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் மேடை அருகே முன்னேறி கூச்சலிட்டதால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

cheyyaru balu interview about Hariharan Music Show In Jaffna

போலீசார் தடியடி: நடிகை தமன்னாவின் நடனத்தால் வெறிகொண்ட ரசிகர்கள் மேடையை நோக்கி பாய்ந்தனர். கட்டண இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களை தாண்டி ரசிகர்கள் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க, கேமராக்கள், ஸ்பீக்கர்கள் பொருத்தியிருந்த மேடைகளில் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

cheyyaru balu interview about Hariharan Music Show In Jaffna

செய்யாறு பாலு: இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிருந்து சென்ற அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வந்தார்கள், அதற்கு முழுக்க முழுக்க காரணம் ரம்பாவின் கணவர் இந்திரன். இந்த இந்திரன் யார் என்றால் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர், கனடாவில் பெரிய தொழிலதிபர். நடிகைகள் வழக்கம் போல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதால், ரம்பா இருந்த புகழுக்கு இவரை திருமணம் செய்து கொண்டார்.

cheyyaru balu interview about Hariharan Music Show In Jaffna

தமன்னாவுக்கு ஒரு கோடி: இவர் தனது சொந்த ஊரான இலங்கையில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார். இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம் என்ற அறிவித்துவிட்டார். அதன் பின் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதை கமர்ஷியலாக ஏன் மாற்றக்கூடாது என நினைத்து தமன்னாவை அழைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொள்ள ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து நாற்பதாயிரம், பத்தாயிரம், ஐந்து ஆயிரம் என டிக்கெட் கட்டணமாக நிர்ணயித்துள்ளார். மேலும், 40 ஆயிரம் கட்டணம் பெற்றவர்கள் தமன்னாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற புது ஆபரை கொடுத்துள்ளார். இப்படி இலங்கையில் நடந்த முழு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் ரம்பா கணவரின் பணத்தாசை தான் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X