Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!

சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் - சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார்.

அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமே தவிர, நான் நினைத்த போது திருமணம் செய்து கொள்வேன், நினைத்த போது விவாகரத்து செய்து கொள்வேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது. இவர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு விவாகரத்து என்பது டீ சாப்பிடுவது போல சாதாரணமான விஷயம் என்று அவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

jayam ravi aarthi ravi cheyyaru balu

ஜெயம் ரவி அறிக்கை: கொஞ்ச நாளா புகைத்துகொண்டு இருந்த ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை குறித்து, இன்று ஜெயம் ரவி நேரடியாக அறிக்கை வெளியிட்டுவிட்டார். மேலும், இது என் தனிப்பட்ட வாழ்க்கை, இது என்னுடன் சார்ந்த பிரச்சனையாக இருந்ததால், நானும் ஆர்த்தியும் சேர்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இதில் யாரும் தலையிட வேண்டாம், குறுக்கிட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் பிரிவதாக முடிவு எடுத்தது எனக்கு தெரியும் இருந்தாலும், இதுஒரு உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்ததால்,இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை. ஜெயம் ரவி சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், அவர் இந்த இடத்தை அடைந்தது சாதாரண விஷயம் இல்லை. இதற்கு காரணம் அவரின் கடும் உழைப்பு தான்.

எதற்கு திருமணம்: இந்த நேரத்தில் தான் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இப்படி மனமுறிவு செய்து கொள்வது சரியா, குழந்தைகளுக்காகவாது இந்த முடிவை எடுக்காமல் இருந்து இருக்கலாம். திருமணம் செய்து சேர்ந்து வாழ முடியாத போது, எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X