காதல் தோல்வி.. குடிக்கு அடிமையான மனிஷா கொய்ராலாவின் மறுபக்கம்!
சென்னை: நடிகை மனிஷா கொய்ராலா, 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிய இவர், காதல் தோல்வியால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விவரித்துள்ளார்.
நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், 1995-ம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு முதல்வன், உயிரே, இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனிஷா தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

நடிகை மனிஷா கொய்ராலா: செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், நடிகை மனிஷா கொய்ராலா மணிரத்னம் இயக்கத்தில் உருவான பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் வேண்டும் என்று மணிரத்னம் பிடிவாதமாக இருந்தார். பம்பாய் படத்தின் கதையை கேட்ட மனிஷா கொய்ராலா இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னதும் ஷாக்காகி முடியாது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு பலர் மணிரத்னம் பற்றி சொல்லிய பிறகு அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.
குடிக்கு அடிமை: எந்த அளவிற்கு இவர் பிரபலமானாரோ அதைவிட பல மடங்கு கிசுகிசுக்களில் சிக்கினார். இந்த நேரத்தில் பேஸ்புக் மூலம் நண்பரான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் பாதியில் முறிந்து போனதால் மன அழுத்தத்தில் இருந்த மனிஷா, குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்தியன் படப்பிடிப்பின் போது, தன்னையே மறந்து குடிக்கும் நிலைக்கு போனார். அப்போது தான் நடிகர் விக்ரமின் மனைவி கவுன்சிலிங் தந்து அவரை மனதளவில் ஏற்றினார்.
புற்றுநோய்: ஒருவழியாக மீண்ட மனிஷா கொய்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் நேபாளம் சென்று, அங்கு புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒருவழியாக மீண்டார். அப்போது அவர் மிகச்சிறந்த காரியம் ஒன்றை செய்தார். அது என்னவென்றால் சிறுமிகளை வைத்து நேபாளத்தில் நடந்த விபசாரத்தை முக்கால்வாசி ஒழித்தார். கிட்டத்தட்ட 100 புரோக்கர்கள் சட்டத்தின் கையில் சிக்குவதற்கு காரணமாக இருந்தார் என செய்யாறு பாலு மனிஷா கொய்ராலா பற்றி பல விஷயத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











