ஷாருக்கானுக்கு பயமா? நல்ல வேளை விஜய் நடிக்கல.. ஜவான் படத்தின் ஓட்டைகளை புட்டுபுட்டு வைத்த பிரபலம்!

சென்னை: ஜவான் படத்தில் நல்ல வேளை விஜய் நடிக்கவில்லை என்று, படத்தின் ஓட்டைகளை செய்யாறு பாலு புட்டு புட்டு வைத்துள்ளார்.

விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அட்லீ, ஐந்தாவது படத்திலேயே பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார்.

வியாழக்கிழமை வெளியான ஜவான் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வரும் போதும், இப்படம் குறித்து இணையத்தில் பல நெகடிவ் விமர்சனங்கள் வந்துக் கொண்டு இருக்கிறது.

Cheyyaru balu negative reviews about the jawan movie

ஜவான் திரைப்படம்: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செய்யாறு பாலு, ஜவான் திரைப்படம் ஏதோ ஒரு விஷயத்தை அழுத்தமா சொல்லப்போகுதுனு எதிர்பார்த்து காத்திருந்த ஆடியன்சை அது திருப்திப்படுத்தவில்லை. தியேட்டரில் நான் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, என் பக்கத்தில் இருப்பர் ஒவ்வொரு சீனையும் பார்த்து இது இந்த படம், அது அந்த படம் என்று கமெண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.

ஷாருக்கானுக்கு பயமா: ஜவான் படம் ஆரம்பிக்கும் போது விவசாய கடன் பிரச்சனை, இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையின் அவலம், கோபால் விஷவாயு பிரச்சனை, ஊழல் போன்றவற்றை கையில் எடுத்த அட்லீ எதைப்பற்றியும் தெளிவாக சொல்லாமல் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். மத்திய அரசு பற்றி பேச எதிர்க்க அட்லீக்கு பயமா? இல்லை ஷாருக்கானுக்கு பயமா? என்று தெரியவில்லை.

பூசி மொழிகிவிட்டார்: அதே போல ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் மிக முக்கியமானது. அந்த கேரக்டரை அழுத்தமாக சொல்லாமல் பூசி மொழுகிவிட்டார். இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கதைக்கு ஒரு அழுத்தம் கிடைத்து இருக்கும். விஜய்சேதுபதி போன்ற ஒரு நல்ல நடிகரை அட்லீ வீணடித்துவிட்டார். அவரை மட்டுமில்ல, நயன்தாரா, பிரியாமணி, சஞ்சய் தத் என அனைத்து கதாபாத்திரமும் வேஸ்ட்டா போச்சு.

நல்ல வேளை நடிக்கல: நடிகர் அட்லீ, இந்த கதையை முதலில் தளபதிக்கு தான் சொல்லி இருக்கிறார், கதை கேட்டபின், விஜய் வேண்டாம் என்று பின்வாங்கி இருக்கிறார். அதன் பிறகு தான் இந்த கதை ஷாருக்கானுக்கு சொல்லப்பட்டது. நல்ல வேளை இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. மேலும், ஷாருக்கான் போன்ற ஸ்டார் நடிகருக்கு பாதி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே, படம் எப்படி இருக்கும் என்று கண்டுபிடித்துவிடலாம், ஆனால், ஷாருக்கான் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என தெரியவில்லை என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X