குஷியில் ரஜினிகாந்த்.. தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து அதை செய்கிறார்கள்.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த அவர்; சில வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார்.
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தார். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள். ஆனால் வெல்வதற்கு அழகைவிடவும் திறமை அதீத முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை வளர்த்து இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். முக்கியமாக நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, திரைப்படங்கள் தயாரிப்பது என பல ப்ளாட்பார்ம்களில் ஜொலிக்கிறார் அவர்.

ராயன்: நடிகராக கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அரத பழசான கதையை சுமாரான திரைக்கதையுடன் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்ததால்தான் படம் படுத்துவிட்டது என்று ரசிகர்கள் கூறினார்கள்.
குபேரா: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். வாத்தி படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. எனவே குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களையும் இயக்குகிறார்.
திருமணம் டூ பிரிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. நாளுக்கு நாள் வளர்ந்த அந்தப் பிரச்னை மிகப்பெரிய விரிசலை அவர்களுக்குள் உண்டாக்கியது. இதனையடுத்து தாங்கள் பிரிவதாக அறிவித்தனர் இருவரும்.
ரஜினியின் முயற்சி: இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் முயன்றுவருவதாகவும்; ரஜினியேக்கூட நேரடியாக களத்தில் இறங்கியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றும் சொல்லப்பட்டது. சூழல் இப்படி இருக்க சமீபமாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக்கிட்டு கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்வதற்கான சமிக்ஞைதான் இது என்று கூறுகிறார்கள்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி 73 வயது அப்பாவாக தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் கவலையோடுதான் இருந்தார். ஏனெனில் பேரன்கள் வளர்ந்துவிட்டார்கள். இப்போது மகளும், மருமகனும் பிரிந்திருக்கிறார்களே என்கிற கவலைதான் அது.
ஆனால் சமீபமாக தனுஷ் - ஐஸ்வர்யா சேர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.முக்கியமாக ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து அடுத்த வருடத்துடன் 50 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. எனவே அதனையொட்டி ஐஸ்வர்யா ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அதில் தனுஷும் பங்களிக்கவிருக்கிறார். இதன் காரணமாக ரஜினி இப்போது குஷியாக இருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











