உச்சகட்ட வெறி.. தனுஷுக்கு போட்டியாகத்தான் அதை செய்தாராம் ஐஸ்வர்யா.. பிரபலம் சொல்றத கேளுங்க

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில் இப்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும். எனவே இனிமேல் இரண்டு பேரும் இணைவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று கருதப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டினார் ஐஸ்வர்யா. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு அதுகுறித்து பேசியிருக்கிறார்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் நிற்கிறது. இரண்டு பேருமே விவாகரத்து வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கிறார்கள். இரண்டு பேரையும் சேர்த்து வைக்க குடும்பத்தார்கள் எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தன. சூழல் இப்படி இருக்க ஐஸ்வர்யா பிரமாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் செய்யாறு பாலு அதுகுறித்து பேசியிருக்கிறார்.

Cheyyaru Balu Open Talks about Dhanush Aishwarya rajinikanth Issue

செய்யாறு பாலு பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “போயஸ் கார்டனில் தனுஷ் மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டி அதில் தன்னுடைய அப்பா, அம்மாவை வைத்திருக்கிறார். அதில் ஆரம்பித்த விவாதம்தான் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டை பாதி கட்டி கொண்டிருக்கும்போதே தனுஷுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. அதனையடுத்து பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் நான் உங்களுக்கு ஆறு படங்களுக்கான கால்ஷீட்டை தருகிறேன். நீங்கள் மிகப்பெரிய தொகையை சம்பளமாக தாருங்கள் என தனுஷ் கேட்டதாக பேசப்படுகிறது.

வழக்கமான ஒன்றுதான்: ஒரு வீட்டில் மூத்த பிள்ளை மீது அப்பா, அம்மாவுக்கு அதிக பாசம் இருப்பது எப்போதும் வழக்கமான ஒன்றுதான். அதேமாதிரிதான் ஐஸ்வர்யா மீதும் ரஜினிக்கு பாசம் அதிகம். அவர் தன்னுடைய அம்மா ஜாடையில் பிறந்திருப்பதாக ரஜினி அடிக்கடி சொல்வதுண்டு. அதை ஒரு பேட்டியாகவும் கொடுத்திருந்தார் ரஜினி. ஐஸ்வர்யா மீதான அன்பு ராணா படத்தின்போது ரஜினிக்கு அதிகமானது. ஏனெனில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டுக்கு வந்திருந்தார் ரஜினி.

ஐஸ்வர்யாதான் எல்லாமே: வீட்டுக்கு வந்த பிறகு அவருக்கு வாந்தி வந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதித்தபோது சாதாரண வயிற்று பிரச்னைதான் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால் நள்ளிரவு மீண்டும் வாந்தி எடுத்தார். பிறகுதான் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதற்குள் ஏகப்பட்ட செய்திகள் பரவ ஆரம்பித்தன. அவற்றில் பாதி வதந்திதான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் ஐஸ்வர்யாதான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார்.

ஆடியோ: ரஜினி பற்றிய வதந்திகளை ஆஃப் செய்வதற்கு, தான் நன்றாக இருக்கிறேன் என்று ரஜினியை பேச வைத்து ஆடியோ வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. பிறகு ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு நேராக தனது வீட்டுக்கு செல்லாமல் ஐஸ்வர்யாவின் வீட்டுக்குத்தான் சென்றார். அவ்வளவு பாசம் அவர் மீது ரஜினிக்கு.

வீடு கட்ட காரணம்: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த பிரச்னையால் ஐஸ்வர்யா மன அழுத்தத்தில் வீட்டில் இருந்தபோது நீ படம் செய் என்று சொல்லி உத்வேகப்படுத்தி லால் சலாம் படத்தை எடுக்க வைத்தார். அதனைத் தொடர்ந்துதான் தனுஷின் வீட்டைவிடவும் ஒரு பிரமாண்ட வீட்டை கட்டி அதில் உங்கள் இரண்டு பேரையும் அமர வைக்கிறேன் என ரஜினியிடமும், லதாவிடமும் சொல்லித்தான் புது வீட்டை கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X