விஜய் தரப்பால் சிவகார்த்திகேயனுக்கு பிரச்னையா?.. ஆரம்பித்தது பஞ்சாயத்து.. செய்யாறு பாலு ஓபன் டாக்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனுக்கு விஜய் தரப்பால் பிரச்னை வந்ததா என்பது குறித்து செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

சின்னத்திரையில் முதன்முறையாக தோன்றிய சிவகார்த்திகேயன் பிறகு சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்தார். சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று கணிக்கப்பட்ட அவர் இன்று கோலிவுட்டில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக டாக்டர், டான் என்று அவர் நடித்த இரண்டு படங்களுமே வரிசையாக 100 கோடி கிளப்பில் இணைந்தது.

Cheyyaru Balu Open Talks about Sivakarthikeyan Problems

மாவீரன்: டான் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அவர் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர் நடித்த மாவீரன் திரைப்படம் கடைசியாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21ஆவது படத்தில் நடித்துவருகிறார்.

சர்ச்சை: சிவகார்த்திகேயனுக்கு க்ளீன் பாய் என்ற இமேஜும் இருந்தது. ஆனால் அந்த இமேஜ் சமீபத்திய இமானின் பேட்டியால் டேமேஜ் ஆனது. ஒரு யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது மீண்டும் நடக்காது. எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அந்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை” என்றிருந்தார்.

மௌனமே பதில்: இமானின் அந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் தங்களது யூகங்களையும், கருத்துக்களையும் சொன்னார்கள். சிவகார்த்திகேயன் மௌனம் காத்துவருகிறார். இமானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த எஸ்கே ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கின்றன என்று குறிப்பிட்டனர்.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயனை சுற்றி பிரச்னைகள் எழுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயனே அடுத்த விஜய் என்று பலரும் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போதுதான் இந்தப் பிரச்னை எல்லாம் உருவாக ஆரம்பித்தது. ஒருவருக்கு உடல் வலிமையை விட மன வலிமை ரொம்பவே முக்கியம். சிவகார்த்திகேயனை மன ரீதியாக நோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று விஜய் எப்போதும் சொன்னதில்லை. அதேபோல் அடுத்த விஜய் நான் தான் என்று சிவகார்த்திகேயனும் சொன்னதில்லை. ஆனால் விஜய் இடத்தில் ரசிகர்கள் பொருத்தி பார்க்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம் விஜய் ரசிகர்களோ இல்லை ரஜினிகாந்த் ரசிகர்களோ சிவகார்த்திகேயனுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் இண்ட்ஸ்ட்ரியில் இருப்பவர்கள் சிவாவை தொழில்ரீதியாக முடக்க இதை செய்கிறார்கள்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X