அந்த நடிகையையும் விட்டுவைக்கலையா?.. பாலா செய்த டார்ச்சர் அவ்வளவாம்.. செய்யாறு பாலு ஓபன் டாக்
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
குற்றச்சாட்டு: பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட குச்சியை வைத்து அவர் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் அது ஒரிஜினல் குச்சி இல்லை டம்மி குச்சி என்று பாலா கூறியிருந்தார். இந்தச் சூழலில் முதலில் வணங்கானில் சூர்யா நடித்தபோது அப்படத்தில் இருந்த நடிகை மமிதா பைஜு சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அடித்த பாலா: அந்தப் பேட்டியில் பேசிய மமிதா, “சூர்யா கமிட்டான வணங்கான் படத்தில் நான் முதலில் நடித்தேன். ஒரு சீனில் பாடிக்கொண்டே ஆட வேண்டும். அதற்கான பயிற்சியை நான் எடுத்தேன். ஆனால் டேக்கின்போது எனக்கு பதற்றமாகிவிட்டதால் சொதப்பிவிட்டேன். சில டேக்குகள் போயின. அப்போது பாலா பின்னிருந்து எனது தோள்பட்டையில் அடித்தார். நல்லவேளை அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என்றார். மமிதாவின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு பேசிய மமிதா பாலா தன்னை டார்ச்சர் எல்லாம் செய்யவில்லை என்று கூறினார்.
செய்யாறு பாலு ஓபன் டாக்: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் வீடியோவில், "எந்த நடிகராக இருந்தாலும் பாலா கதையை சொல்லமாட்டார். நந்தா பட சமயத்தில் லைலா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் அவர், பாலா என்னை கடுமையாக டார்ச்சர் செய்கிறார் என்று சொல்லி அழுதார். ஒருகட்டத்தில் படத்திலிருந்து விலகிவிடலாம் என்றெல்லாம் முடிவு எடுத்தார். ஒருவழியாக படத்தில் நடித்து முடித்த பிறகு படத்தை பார்த்த அவர் ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











