Simbu - சிம்பு - ஹன்சிகா பிரிந்ததற்கு இதுதான் காரணமா? .. பிரபலம் பகிர்ந்த தகவல்
சென்னை: Simbu (சிம்பு) சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்குமான காதல் முறிவு காரணத்தை பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் ஃப்ரீ ஹிட்டில் விளையாடுபவர் சிக்ஸ் அடிப்பவர். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருந்தன. அவரை சூழ்ந்த பிரச்னை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எனவே உடல் எடை கூடி மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்.

செகண்ட் இன்னிங்ஸ்: உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்வரன் கைகொடுக்கவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடுக்கு கூட்டம் அலைமோதியது.அதன் காரணமாக படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. எனவே விண்டேஜ் சிம்பு மீண்டும் வந்துவிட்டார் என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
வெந்து தணிந்தது காடு: அதேபோல் மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது. எனவே இனி சிம்புவுக்கு சறுக்கலே கிடையாது என்ற நம்பிக்கை பலமாக பிறந்தது ரசிகர்களுக்கு.
சறுக்கிய பத்து தல: இப்படிப்பட்ட சூழலில் மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல படத்தில் நடித்தார். கன்னடத்தில் மெகா ஹிட்டடித்தாலும் தமிழில் சொதப்பியது. இருப்பினும் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு பத்து தல சின்ன சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சறுக்கலை அடுத்தப் படத்தில் சரி செய்துவிடுவார் என நம்பலாம்,.

காதல்கள்: இதற்கிடையே சிம்பு தன்னுடைய முதல் இன்னிங்ஸில் நயன் தாராவை முதலில் காதலித்தார். இருவருக்கும் திருமணம் என்று பேச்சு ஓடிய சூழலில் காதல் பிரேக் அப் ஆனது. அதனையடுத்து பல வருடஙக்ள் சிங்கிளாக இருந்த சிம்பு அடுத்ததாக ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். அஜித் - ஷாலினி போல் நாங்கள் வாழ்வோம் என இரண்டு பேரும் ஓபனாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் அந்தக் காதலும் பிரிவிலேயே முடிந்தது. இதனையடுத்து யாரையும் காதலிக்காத சிம்பு தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்தச் சூழலில் சிம்பு - ஹன்சிகா காதலின் பிரிவுக்கு காரணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "சிம்பு சிறு வயதில் இருந்தே எதற்குமே கஷ்டப்பட்டதில்லை. அதன் காரணமாக சிம்புவுக்கு எல்லாமே ஜாலிதான். குழந்தைகளின் விளையாட்டு இயல்பு மாறாமல் அவரிடம் இருந்தது. அதனை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சிம்புவின் நடத்தைதான் ஹன்சிகா - சிம்பு காதல் முறிவுக்கு காரணம். சிம்பு கொஞ்சம் துடுக்கான கேரக்டர். அது ஹன்சிகாவுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். எனவே பிரேக் அப் செய்திருப்பார்கள்" என்றார். முன்னதாக ஹன்சிகா மோத்வானி சோஹெல் கத்தூரியா என்பவரை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











