இந்திரஜா - கார்த்திக்கு 15 வயசு வித்தியாசம்.. வரதட்சணை இவ்வளவா?.. செய்யாறு பாலு சொன்ன விஷயம்!
சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கார்த்திக் என்பவரை கடந்த மார்ச் 24ம் தேதி மதுரையில் திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஒரு மாத காலமாகவே திருமண கொண்டாட்டம் களைகட்டியது. பல கோடி செலவு செய்து தனது மகள் திருமணத்தை ஜாம் ஜாமென நடத்தியுள்ளார் ரோபோ சங்கர். மறைந்த காமெடி நடிகர் விவேக்கின் மகள் திருமணம் எளிமையாக நடந்த நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை இப்படி நடத்தியிருக்கிறாரே என ஏகப்பட்ட பேச்சுகளும் எழுந்துள்ளன.
குடும்பத்துடன் ஆட்டம் போடுவது, நிச்சயதார்த்தம், ஹல்தி, திருமணத்துக்கு முந்தைய ரிசப்ஷன், சென்னையில் சினிமா பிரபலங்களுக்கான ரிசப்ஷன் என ஒரே கும்மாளம் போடுகிறார்களே என பொறாமையிலும் பலர் பொங்கி வருகின்றனர்.

கார்த்திக் மற்றும் இந்திரஜா இடையே வயது வித்தியாசம் அதிகம் என்றும் கார்த்திக் யார் என்பது பற்றியும் பல விஷயங்களை செய்யாறு பாலு தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
உடம்பு முடியாமல் போன ரோபோ சங்கர்: சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட ரோபோ சங்கர் உடம்பு முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில், சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டன. மீண்டும் அதிலிருந்து மீண்ட அவர் தனது மகளுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கோலாகலமாக பல கோடிகளை கொட்டி மகள் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
தத்தெடுத்த தம்பி: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மாமா கார்த்திக்கையே திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் தாய் மாமா என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி நானில்லை. ஆதரவற்ற என்னை அவர் தான் தத்தெடுத்து வளர்த்தார் என கார்த்திக் பேசியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
15 வயசு வித்தியாசம்: கார்த்திக்கும் இந்திரஜா சங்கருக்கும் 15 வயசு வித்தியாசம் என பகீர் கிளப்பி உள்ளார் செய்யாறு பாலு. ஆனால், அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்றும் கார்த்திக் சுமார் 27 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நல்ல குணமுடையவர் என்றும் அவரை பற்றி தெரிந்த உடனே ராதிகா சரத்குமார் ராஜ விருந்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
வரதட்சணை எல்லாம் மேட்டரே இல்லை: ரோபோ சங்கர் அவரது மகளுக்கு அதிகளவில் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்தார் என்றெல்லாம் சொல்வது எல்லாம் அவருடைய குடும்ப விஷயம். ரோபோ சங்கரை விட அவரது மாப்பிள்ளை கார்த்திக் அன்பு இல்லம் எனும் ஆதரவற்றோர் இல்லத்தையே நடத்தி வருகிறார். 15 லட்சத்துக்கு கார், பல சவரன் நகை எல்லாம் போட்டுள்ளார் என்றால் எல்லாமே அவரது ஒரே மகளுக்காக சேர்த்து வைத்தது தான் என செய்யாறு பாலு பேசியுள்ளார்.
பொறாமைப்படக் கூடாது: ரோபோ சங்கர் மற்றும் இந்திரஜா சங்கர் எல்லாத்தையும் வீடியோவாக வெளியிட்டு ஆட்டம் போட்டு அலப்பறை பண்றாங்க என பொறாமை எல்லாம் பண்ணக் கூடாது. சமூகத்திற்கும் அவர்கள் பல நன்மைகளை செய்துள்ளனர் அதை பாராட்ட வேண்டும் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











