Suriya- வாடிவாசலில் இருந்து அமீரை தூக்க சூர்யா போட்ட பிளான் இதுவா?.. செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்
சென்னை: Suriya (சூர்யா) வாடிவாசல் படத்திலிருந்து அமீரை தூக்குவதற்கு சூர்யா பிளான் செய்ததாக செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
கார்த்தியின் முதல் படமான பருத்திவீரனை அமீர் இயக்கினார். படம் மெகா ஹிட்டாகி அவருக்கு இன்னமும் ஒரு அடையாளமாக இருக்கிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் சூர்யா தரப்புக்கும், அமீர் தரப்புக்கும் முட்டிக்கொண்டது. இதனையடுத்து அமீர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

மீண்டும் ஆரம்பம்: சூழல் இப்படி இருக்க கார்த்தி 25 விழாவை பற்றிய பேச்சு பருத்திவீரன் பிரச்னையை மீண்டும் எழ செய்தது. ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில், "அமீர் ஒரு திருடன். வேலை தெரியாது. பொய்க்கணக்கு எழுதுவார்.. அவரால் யாருக்குமே எந்த பிரயோஜனமும் இல்லை: என்றார். அவரது இந்தப் பேச்சு பெரும் எதிர்வினையை சம்பாதித்தது.
அணி திரண்ட படைப்பாளிகள்; ஞானவேல் ராஜா அப்படி பேசியதற்கு அமீர் முதலில் பதிலடி கொடுத்தார். அதனையடுத்து சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன், பாரதிராஜா சேரன், நந்தா பெரியசாமி, சினேகன், ராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். இதனால் இது ஞானவேல் Vs படைப்பாளிகள் என்று மாறியது.
வருத்தம்: ஞானவேல் ராஜாவுக்கு சூர்யா குடும்பம் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகிய மூன்றுபேருமே இதுகுறித்து இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். அதேசமயம் கரு. பழனியப்பன் தனது அறிக்கையில் சிவக்குமாரை கொண்டு வந்ததும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
வாடிவாசல்: இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அதில் அமீருக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் இப்போது பருத்திவீரன் பிரச்னை மீண்டும் தலை தூக்கியிருப்பதால் வாடிவாசலில் அமீர் இருப்பாரா அல்லது அமீர் சூர்யாவின் அழுத்தத்தால் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த ஒரு பேட்டியில், "வாடிவாசலில் அமீருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்துக்குள் அமீர் வந்ததை உணர்ந்துகொண்ட சூர்யா; அவரை வெளியேற்றுங்கள் என வெற்றிமாறனிடம் நேரடியாக சொல்லவில்லை.
அதேசமயம் அவரிடம், "அந்தக் கேரக்டருக்கு மோகன்லாலை நடிக்க வைக்கலாமா?.. நான் சொன்னால் அவர் கேட்பார்" என சொல்லியிருக்கிறார். அதற்கு வெற்றிமாறனோ இல்லவே இல்லை. இந்தக் கேரக்டரில் அமீர்தான் நடிக்கிறார். அமீர் இந்தப் படத்தில் இல்லையென்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக பாலு பேசினார்.


Click it and Unblock the Notifications











