Actor Vishal: தொடர்ந்து 20 நாட்கள் குப்பையிலேயே படுத்துக்கிடந்த விஷால்.. பாலா செய்த சம்பவம்!
சென்னை: நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் அவன் இவன். பாலா இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.
அவன் இவன் படத்தில் மாறு கண்ணுடன் நடித்திருந்தார் விஷால். இதனால் இவரது கண் பிரச்சினைக்கு உள்ளானது.

மேலும் இந்தப் படத்தின் ஆரம்பத்தில் விஷாலுக்கு பாலா செய்த சம்பவம் குறித்து தற்போது செய்யாறு பாலு வெளிப்படுத்தியுள்ளார்.
பாலா இயக்கத்தில் நடிப்பதற்காக விஷால் பட்ட கஷ்டங்கள்: நடிகர் விஷால் இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விஷாலுக்கு சிறப்பாக அமைந்தாலும் படம் வெற்றிப் பெறவில்லை. இந்தப் படம் கடந்த 2011ம் ஆண்டில் வெளியானது. படத்தில் விஷாலுடன் ஆர்யாவும் நடித்திருந்தார். படத்தில் ஜனனி ஐயர், மது ஷாலினி ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி தற்போது 12 ஆண்டுகளை கடந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தப் படத்தில் விஷாலின் நடிப்பு, சூர்யாவின் கேமியோ ரோல், பாடல்கள் ஆகியவை ரசிகர்களை கவர்ந்திருந்தன. குறிப்பாக விஷால் இந்தப் படத்தில் டோரிக் கண் கொண்டவராக நடித்திருந்தார். இதனால் அவருக்கு கண்ணில் அதிகமான பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து படம் நிறைவடைந்தவுடன் மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை பெற்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இன்னும் சில தினங்கள் இதேபோல நடித்திருந்தால் அவரது கண்பார்வையை இழக்கும் சூழல் உருவாகியிருக்கும் என்று கூறியுள்ளனர்.

விஷால் தனது கண்களை அதுபோல கொண்டுவர முன்னதாக அதிகமான மெனக்கெடலை செய்துள்ளார். அத்தனை பெரிய முயற்சியை செய்த விஷாலின் அடுத்தடுத்த படங்களிலும் இந்த பாதிப்பு அப்பட்டமாக தெரிந்தது. முன்னதாக பாலா இயக்கத்தில் நடிக்க தான் விரும்புவதாக ஆர்யாவிடம் விஷால் தொடர்ந்து நச்சரிக்க, நேரம் பார்த்து இதை பாலாவிடம் கூறியிருந்துள்ளார் ஆர்யா. இதையடுத்து விஷாலை தன்னை பார்க்க வரும்படி பாலாவும் கூறியுள்ளார்.
இதையடுத்து மறுநாள் பாலாவை பார்க்க வந்த விஷால், தன்னுடைய உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அவர்கள், விஷாலுக்கு குடை பிடித்துக் கொண்டும், ஜூஸ் எடுத்துக் கொண்டும் சென்றதை பார்த்த பாலா, உடனடியாக அவர்களை வெளியேற்றியுள்ளார். மேலும் தொடர்ந்து தன்னுடைய படத்தில் விஷாலை கமிட் செய்த பாலா, அவரை தொடர்ந்து முதல் 20 நாட்கள் குப்பைமேட்டில் தினமும் படுக்க வைத்துள்ளார். இதுகுறித்து தற்போது பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து குப்பை மேட்டில் எதுவும் சொல்லாமல் விஷால் படுத்துக் கிடந்துள்ளார். காலையில் சூட்டிங் துவங்கும்போது குப்பைமேட்டில் படுக்கத் துவங்கும் விஷால், படத்தின் சூட்டிங் பேக்கப் ஆகும்வரை அப்படியே இருந்துள்ளார். இதுகுறித்து பாலாவிடம் கேட்க விஷால் மற்றும் ஆர்யா பயப்பட்டுள்ளதாகவும் செய்யாறு பாலு கூறியுள்ளார். தன்னுடைய படங்களின்மூலம் மிகச்சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றுள்ள பாலா, விஷாலின் பெரிய நடிகன் என்ற பிம்பத்தை உடைக்கவே இப்படி நடந்துக் கொண்டுள்ளதாகவும் செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











