தேசிய விருது வாங்கிய பிரியாமணி சினிமாவில் தேய்ந்து போக காரணம் என்ன தெரியுமா? செய்யாறு பாலு பளிச்!

சென்னை: பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி திடீரென சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக தேய்ந்து போக என்ன காரணம் என்பது குறித்து செய்யாறு பாலு பேசியுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் வியக்க வைத்தவர் பிரியாமணி.

Cheyyaru Balu reveals Priyamani dark side of Life

திருமணம் தான் காரணம்: அந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதன் பின்னர் பிரியாமணி பல தேசிய விருதுகளை வென்று இருக்க வேண்டியவர். ஆனால் ஒரே ஒரு தேசிய விருதுடன் அவர் தேய்ந்து போக காரணமே அவருக்கு முஸ்லிம் நபருடன் நடந்த திருமணம்தான் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

மிஸ்ஸான இயற்கை: மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இயற்கை படத்தில் பிரியாமணி தான் முதலில் நடிக்க வேண்டியது. படப்பிடிப்புத் தளத்தில், பிரியாமணி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.. இயக்குனர் ஜனநாதன் வருகிறார். அவங்க அம்மா எந்திரிக்க சொல்றாங்க ஆனாலும், பிரியாமணி அவரும் ஒரு மனுஷன் தானே என் சொல்லிவிட்டு எந்திரிக்காமல் உட்கார்ந்திருக்கிறார். இது ஜனநாதன் காதுக்கு விழுந்து விட்டது. உடனே அங்க வந்தவர், சரியா தான் சொல்றாங்க இயக்குநருக்கு என்ன ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு.. இந்த ஆட்டிட்யூட் தான் எனக்கு இந்தப் படத்திற்கு வேண்டும் என்று சொன்னாராம்.

ஆனால் அதன் பின்னர், கால்ஷீட் பிரச்சினை காரணமாக பிரியாமணி இயற்கை படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக குட்டி ராதிகா நடித்திருந்தார். இயற்கை படத்தை பார்த்துவிட்டு இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டேனே என பலமுறை பிரியாமணி வருந்தினாராம்.

ஷாருக்கான் கொடுத்த ஊக்கம்: நீண்ட நாள் கழித்து, ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் பிரியாமணிக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷாருக்கானுக்கு பின்னாடி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து டென்ஷனான ஷாருக்கான் நீங்க என் பக்கத்தில் வந்து ஆடுங்க என்று கூறிவிட்டு ஷோபி மாஸ்டரிடம் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கு டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்ததே பிரியாமணி தான் என்றாராம்.

தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகையான பிரியாமணி சினிமாவில் சைடு நடிகையாக மாறக் காரணமே அவரது திருமண வாழ்க்கை தான் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

சமீபத்தில், பிரியாமணி அளித்த பேட்டியில், தனது கணவர் மற்றும் குடும்பம் கொடுத்த ஊக்கம் காரணமாகத்தான் சினிமாவில் நடித்து வருகிறேன். அவர்கள், அனுமதி அளிக்கவில்லை என்றால், நடிக்கவே முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X