குடிபோதையில் தோள் மேல் கைப்போட்ட இயக்குநர்?.. கடனாளியாக்கினாரா கமல்?.. செய்யாறு பாலு ஓபன் டாக்

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் கமல் ஹாசன் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. எனவே அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்

Cheyyaru Balu Reveals shocking News About Kamal Haasan

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கமல் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்யாறு பாலு பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கமல் ஹாசனின் ஒரு பிறந்தநாளில் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடினார்கள். அப்போது ஒரு இயக்குநரும், தயாரிப்பாளரும் கமல் ஹாசனை பார்த்ததும் குடிபோதையில் சென்று அவரது தோள் மேல் கையை போட்டுக்கொண்டு, நாம் ஒரு படம் பண்ணுவோம் சார் என்று சொல்லிவிட்டார்கள். அந்த இயக்குநர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் அண்ணன், தம்பியை வைத்து தனது வாழ்க்கையில் நடந்ததையே ஒரு படமாகவும் எடுத்தவர்.

ஈகோ: இயக்குநரும், தயாரிப்பாளரும் அப்படி நடந்துகொண்டது கமல் ஹாசனின் ஈகோவை தொட்டுவிட்டது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சரி வாருங்கள் ஒரு படம் செய்யலாம் என்று கமிட்மெண்ட்டையும் கொடுத்துவிட்டார். அப்படி எடுக்கப்பட்ட படம் கமல் ஹாசனின் எக்ஸ்பெரிமெண்ட்டுக்காக எடுக்கப்பட்ட படமாக மாறிவிட்டது. ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் கடனாளியாக மாறிவிட்டார்கள் என்று ஒரு பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது” என்றார். இவ்வளவு விஷயங்களை சொன்ன பாலு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X