சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாரும் தொடக்கூடாது.. கோபத்தை கொப்பளித்த ரஜினிகாந்த்.. செய்யாறு பாலு பேச்சு!

சென்னை: என்றுமே தமிழ் சினிமாவில் நான் மட்டும் தான் சூப்பர்ஸ்டார் என்றும் கரண்ட் மேல கைய வச்சா அது உன்னை தூக்கி அடிக்காம விடாது என மீண்டும் ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் மூலம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் ரஜினிகாந்த் என விமர்சகர் செய்யாறு பாலு புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படமா அல்லது விஜய்க்கு எதிரான ரிவெஞ்ச் படமா என்றே தெரியவில்லையே என ரஜினி ரசிகர்கள் நேற்று இரவு முழுக்க சோஷியல் மீடியாவில் எந்தளவுக்கு விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.

Cheyyaru Balu says Rajinikanth clearly warns Vijay with Jailer 3rd Single Jujubee

பாட்டு நல்லாவே இல்லை என்றும் ரஜினிக்கு பாக்ஸ் ஆபிஸ் பயம் வந்து விட்டது என்றும் விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ட்வீட்களை தெறிக்கவிட்டு பஞ்சாயத்தை பெரிதாக்கி வருகின்றனர்.

ஜெயிலர் 3வது சிங்கிள்: அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவான ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் கமர்ஷியல் ஹிட் அடித்த நிலையில், சூப்பர் சுப்பு வரிகளில் உருவான ஹுகும் மற்றும் ஜுஜுபி என இரு பாடல்களுமே ரஜினிகாந்தின் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் எப்படி பாடல்கள் மூலம் தனது ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தாரா? அதே பாணியை நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் பயன்படுத்தி வச்சு செய்திருக்கிறார் என செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கரண்ட் மேல கைய வச்சா: "களவாணி கண்ணைய்யா காளைய கொம்ப சீவிப்புட்ட.. அது முட்டி கிழிச்சு குத்தாமாத்தான் விடும்மா உன்னையா" என ஆரம்பத்திலேயே சண்டையை பெரிது படுத்தும் விதமாகவே சூப்பர் ஸ்டார் படத்தில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கரண்ட் மேல கைய வச்சா அடிச்சு தூக்காம விடும்மா உன்னையா என ஒவ்வொரு வரிகளும் நடிகர் விஜய்க்கான எச்சரிக்கை பாடலாகவே ஹுகும் பாடலை தொடர்ந்து ஜுஜுபி பாடலையும் ரஜினிகாந்த் உருவாக்கி இருக்கிறார் என செய்யாறு பாலு பேசியுள்ளார்.

Cheyyaru Balu says Rajinikanth clearly warns Vijay with Jailer 3rd Single Jujubee

சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாரும் தொடக்கூடாது: ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிளான ஹுகும் பாடலிலேயே பட்டத்தை பறிக்க 100 பேர் என்கிற வரிகளுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த் இந்த முறை மீண்டும் எச்சரிக்கை விடுத்து சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாரும் தொடக்கூடாது, என் வழி தனி வழி.. சீண்டாத.. தாங்கமாட்ட என்கிற அதே பஞ்ச் லைன் உடன் தான் நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

ஆனால், நடிகர் விஜய் எங்கேயும் சூப்பர்ஸ்டார் என சொல்லிக் கொள்ளவே இல்லை, வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் கிடைத்த வாய்ப்புக்காகவும் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பேசிய பேச்சுத் தான் இப்படி மறைமுக எதிர்ப்பாக வெளியாகி உள்ளது என செய்யாறு பாலு ஜெயிலர் பாடலின் உள்ளர்த்தம் இதுதான் என பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X