Kanguva: சூர்யாவுக்கு பேராசையா?.. 300 கோடி பட்ஜெட்?.. மார்க்கெட்டே இல்லை எனக் கூறும் செய்யாறு பாலு!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செய்யாறு பாலு நடிகர் சூர்யாவுக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை என்றும் அவரது பேராசை தான் படத்தின் பட்ஜெட் இந்த அளவுக்கு செல்ல காரணம் என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகாமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால் இந்நேரம் சூர்யா பற்றி இப்படி எல்லாம் யாரும் பேச மாட்டார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனிமல் படத்துக்கு முன்பாக ரன்பீர் கபூர் நடித்த எந்தவொரு படமும் 500 கோடி கூட தொடாத நிலையில், அந்த படம் 900 கோடி வசூல் ஈட்டியது. படம் வெளியானால் தான் அந்த படத்தின் வெயிட்டேஜ் பொறுத்து தான் வசூல் வேட்டை இருக்கும் எனக் கூறுகின்றனர்.
பல வருடங்களாக: சிங்கம் 2 படத்துக்கு பிறகு பல வருடங்களாக சூர்யா நடித்த பல படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை தழுவின. திரையுலகில் அவருக்கு போதிய மார்க்கெட் இல்லை என்றும் 300 கோடி பட்ஜெட்டில் கங்குவா எடுத்திருப்பதாக சொல்வதையே இந்த அளவுக்கு நம்புவது என தெரியவில்லை என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
அஜித்துக்கே இன்னும் வரல: நடிகர் விஜய் பிகில் மற்றும் வாரிசு படங்களில் தான் 300 கோடி வசூலை ஈட்டினார். லியோ படத்தில் 600 கோடியை தொட்டார். அஜித் இன்னும் 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டவில்லை. இந்நிலையில், சூர்யா படத்தின் பட்ஜெட்டே 300 கோடி என்பது உண்மையானால் படத்தின் வசூல் 600 கோடிக்கு மேல் சென்றால் தான் லாபம் பார்க்க முடியும் என்றும் ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை என செய்யாறு பாலு பேசியுள்ளார்.
இந்தி பெல்ட் கை கொடுத்தால்: சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீரியட் படம் என்பதால் அதிக செலவு செய்து படத்தை உருவாக்கி உள்ளதால் கூறுகின்றனர். மேலும், 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தி பெல்ட்டில் படம் க்ளிக்கானால் பெரிய வசூல் சாதனையை பெறும் என நம்பித்தான் சூர்யா இந்த படத்தில் இறங்கியிருப்பதாக கூறுகின்றனர். கார்த்தியின் காஷ்மோரா போல கொஞ்சம் காட்சிகள் மட்டுமே பீரியட் போர்ஷனாக இருந்தால் படம் தப்பிக்குமா? என தெரியாது என்றும் கூறுகின்றனர்.
நம்பர் ஒன்: அடுத்தடுத்து நடிகர் சூர்யா பெரிய படங்களில் கமிட் ஆகி வருவதற்கு காரணமே விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் அந்த நம்பர் ஒன் இடத்தை அஜித்துக்கு முன்பாக நாம் தட்டித் தூக்க வேண்டும் என்கிற பெரிய குறிக்கோளுடனே சூர்யா படங்களில் தீவிரம் காட்டி வருகிறார் என்றும் கூறுகின்றனர். கங்குவா திரைப்படத்தின் வெற்றி சூர்யாவின் கனவை நனவாக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











