ஆத்தாடி அவளா நீ..பிக்பாஸ் அர்ச்சனாவின் இன்னொரு முகம்..செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதில் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர் டைட்டிலை பெற வாய்ப்பு இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும், அர்ச்சனா குறித்து பலருக்கு தெரியாத தகவலையும் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

அதில்,பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எந்த அளவிற்கும் இல்லாத அளவில் இந்த முறை ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. வழக்கமாக போட்டியாளர்களைத்தான் ட்ரோல் செய்வார்கள். ஆனால், இந்த முறை கமல்ஹாசனே வேண்டாம் அவரை அனுப்பிவிட்டு சிம்புவை போடுங்க என்றார்கள். அதற்கு காரணம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் நிகழ்ச்சியை இயக்குநர் சொல்வதை கேட்டுவிட்டு, புத்தக பரிந்துரை என்று வாய்க்கு வந்ததை கமல் பேசுவதாக இணையத்தில் கமலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன.

Cheyyaru Balu secrets about Bigg Boss contestant Archana

இந்த சீசனில் வலுவான போட்டியாளராக இருந்த விசித்ரா தற்போது வெளியேறி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 40 வயதுக்கு மேல் இருக்கும் போட்டியாளரை பூமர் அங்கிள் என்று சொல்லி சீக்கிரமாகவே வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால், இந்த சீசனில் விசித்ரா இத்தனை நாட்கள் இருந்தது உண்மையிலேயே பெரிய விஷயம் தான். மேலும், விசித்ரா தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசியது இணையத்தில் பேசுபொருளாக இருந்தது என்றார்.

விஜே அர்ச்சனா: ஆனால், தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் பெயரில் அர்ச்சனாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக மணி மற்றும் தினேஷ் ஆகியோர் டஃப் த்ரி வரிசையில் இருக்கின்றனர். இந்த அர்ச்சனா யாருனா இரண்டு ஆண்டுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதித்து இருப்பார். இந்த போட்டோவை பார்த்த சின்மயி, ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

Cheyyaru Balu secrets about Bigg Boss contestant Archana

அவளா நீ: சின்மயி போட்ட கமெண்டை டெலிட் செய்த அர்ச்சனா, நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அனைவருமே வைரமுத்து சாருடைய பாடலை தான் கேட்டிருப்பார்கள். எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட். இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும் என்று கூறி சின்மயிக்கு சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

ராஜா ராணி 2: அர்ச்சனாவின் அப்பா தீவிர பாரதியார் பற்றாளர் என்பதால், சிறுவயது முதலே அர்ச்சனாவும் பாரதியாரின் புத்தகங்களை படித்து வளர்ந்து இருக்கிறார். ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக அர்ச்சனா அறிமுகம் ஆனார். அதன் பின்பு, நடிகர் கலையரசனின் மனைவி நடத்தும் ஜவுளி கடைக்கு சென்ற போது கலையரசனை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தின் மூலம் தான் அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இப்படி படிப்படியாக முன்னுக்கு வந்தவர் தான் விஜே அர்ச்சனா என செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X