அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்..பிரபலங்களை வச்சு செய்த சமீரா ரெட்டி.. செய்யாறு பாலு சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு டார்ச்சர் செய்த பிரபலங்களை நடிகை சமீரா ரெட்டி வச்சு செய்தார் என்று செய்யாறு பாலு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சமீரா ரெட்டி. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமீரா ரெட்டி இப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கிறார்.

கை நழுவிப்போன வாய்ப்பு: சினிமா மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, நடிகை சமீரா ரெட்டி குறித்து பேசி உள்ளார். அதில், நடிகை சமீரா ரெட்டி ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மும்பையில் வளர்ந்த பெண். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து, தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடிக்க ராஜகுமாருடு என்ற படத்தின் ஆடிசனுக்கு சென்றிருந்தார். அனைத்து தேர்விலும் தேர்வான சமீராவிற்கு கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது.
வாட்ச் கம்பெனியில் வேலை: கடைசி நேரத்தில் படவாய்ப்பு கிடைக்காததால், மனம் நொந்துப்போன சமீரா ரெட்டி, சினிமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று வாட்ச் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்றார். அதன் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் இவரின் புகைப்படம் வர அதைப்பார்த்து இவருக்கு பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தவுடன் அடுத்தடுத்து மூன்று பாலிவுட் படங்களில் நடித்தார்.
வாரணம் ஆயிரம்: தெலுங்கிலும் இந்தியிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமீரா ரெட்டியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. இதையடுத்து, அசல், வெடி, வேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

காதல் திருமணம்: இதையடுத்து, 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கணவர் அனுமதித்த போதும், சமீராவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகினார்.
அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சர்: இந்த நேரத்தில் தான் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜெட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள், யார் டார்ச்சர் கொடுத்தது என அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பாலிவுட் மற்றும் கோலிவுட்டை கதிகலங்க வைத்து பெரிய சம்பவம் செய்தார். சில பிரபலங்கள் சமீரா ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்று கெஞ்சும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக நடிகை சமீரா ரெட்டி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











