சினிமாவை விட்டு காணாமல் போன அசீன்.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன தகவல்!
சென்னை: தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின்.
அதனை தொடர்ந்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அசின் ராகுல் ஷர்மா என்ற நபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
பலரின் கனவு நாயகியாக இருந்த அசின் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அழகான குடும்பம்: நடிகை அசின், அழகான பெண் குழந்தை, அன்பான கோடீஸ்வர கணவர் என சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார். அசினின் கணவர் ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். இவர்கள் இருவருக்கும் காதல் வந்ததே கஜினி படத்தில் வரும் காதல் கதைப்போல சுவாரசியமானதாக இருக்கும்.
ராகுல் ஷர்மா: நடிகை அசின் நண்பர் அக்சை என்பவர் தான் ராகுல் ஷர்மாவை, அசினுக்கு அறிமுகப்படுத்துகிறார். அசின் நடிகை என்பது ராகுல் ஷர்மாவிற்கு தெரியும், ஆனால், ராகுல் தொழில் அதிபர் என்பது அசினுக்கு தெரியாது. அதன் பிறகுதான் அசினுக்கு அவர் பெரிய தொழில் அதிபர் என்பதும், கோடீஸ்வரர் என்பதும் தெரிகிறது. கோடீஸ்வரராக இருந்தாலும், அவரிடம் இருக்கும் பணிவு, பண்பை பார்த்து ராகுல் ஷர்மாவை காதலித்தார். அதனை ராகுலும் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

கதையை தேர்வு செய்து நடித்தார்: ராகுல் ஷர்மாவை போலவே அசினும் நல்ல பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான். கேரளாவில் அவருக்கு சொந்தமாக ஒரு அணையே இருக்கிறது என்று அசினின் அப்பா பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்,படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், கதையை நன்றாக தேர்வு செய்தே நடித்தார்.
மகிழ்ச்சியான வாழ்க்கை: விக்ரம்,அஜித், கமல், விஜய் என டாப் நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அசீன், தனது கணவரின் கம்பெனியை நிர்வாகம் செய்து வருகிறார். குழந்தை பிறந்த பின் குழந்தை, கணவன் என அழகான இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாகா வாழ்த்து வருகிறார் என்று செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











