Kanaga : அடுத்தடுத்த இழப்புகள்.. வீட்டில் தன்னைத்தானே சிறைவைத்துக்கொண்ட கனகா.. வெளியான ஷாக் நியூஸ்!

சென்னை : தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகையாக பேசப்பட்ட கனகா அடுத்தடுத்த இழப்புகளால், வீட்டில் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, ரஜினி, பிரபு,கார்த்திக், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை கனகாவுக்கு தற்போது 49 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

Cheyyaru Balu Shared shock information about karakattakaran kanaka

கரகாட்டக்காரன் கனகா : இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, கனகா வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அதில், இயக்குநர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்த போதுதான் நடிகை தேவிகாவின் மகள் கனகா அவர் கண்ணில் படுகிறார். அப்போது கனகாவுக்கு 16 வயதுதான் என்பதால், சினிமாவில் நடிக்கவைக்க விருப்பம் இல்லை என்கிறார். ஆனால், கங்கை அமரன், தேவிகாவிடம் பேசி எப்படியோ சம்மதத்தை வாங்கி கரகாட்டக்காரன் படத்தை எடுக்கிறார்.

ரஜினிக்கு ஜோடி : சுமாராக ஓடும் என்று நினைத்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் கனகாவின் மார்க்கெட் எங்கோ சென்றது. தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அப்போது தான் அதிசயபிறவி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு வருகிறது. கனகாவும் ரஜினியின் தீவிர ரசிகை என்பதால் மறுப்பே தெரிவிக்காமல் அந்த படத்தில் நடிக்கிறார். அந்த படமும் மகத்தான வெற்றி பெறுகிறது.

Cheyyaru Balu Shared shock information about karakattakaran kanaka

மனஅழுத்தத்தில் முடங்கினார் : அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக இருந்த கனகா தனது அம்மாவின் மரணத்திற்கு பிறகு மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி வீட்டிலேயே முடங்கிவிட்டார். அம்மாவாக, அப்பாவாக, பாதுகாவலனாக இருந்த தேவிகாவின் மரணத்தை கனகாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்போது தான், தனக்கு திருமணமாகிவிட்டது என்றும், தனது கணவர் பெயர் புருஷோத்தமன் அவர் நியூயார்க்கில் இருக்கிறார் என்று பேட்டி கொடுத்திருந்தார்.

திருமணம் ஆகிவிட்டது : பத்திரிக்கையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்டபோது இவர் தரவில்லை. இதனால் பல பத்திரிக்கைகளில் கனகா பொய் சொல்கிறார் என்றும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று பல செய்திகள் வெளியாகின. ஆனால், கனகா எதற்காக தனக்கு திருமணமாகிவிட்டது என்று பொய் சொன்னார் என்று யாருக்குமே தெரியவில்லை.

Cheyyaru Balu Shared shock information about karakattakaran kanaka

ஒரு தலை காதல் : இந்த காலகட்டத்தில் தான் தேவிகாவால் சினிமாவாய்ப்பை பெற்ற நடிகர் ஒருவரின் மகன் ராமச்சந்திரன் கனகாவுக்கு பிஏவாக இருந்து அவரை கவனித்துக்கொள்கிறார். அவர் கனகாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, கதை கேட்பது, சம்பளம் வாங்குவது என அனைத்திலும் துணையாக இருந்து, அவரை மன அழுத்தத்தில் இந்து மீட்டுவந்தார். ராமச்சந்திரனுக்கு கனகாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அவர் கனகாவை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

கனகாவின் சோக வாழ்க்கை : ஆனால், ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகிறார். அதன் பிறகு சில வருடத்தில் ராமச்சந்திரன் இறந்த பிறகுதான், கனகாவுக்கு அவர் தன்னை காதலித்ததே தெரிகிறது. இதனால், மீண்டும் மனம் உடைந்துப்போன கனகா, சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத்தானே வீட்டில் சிறைவைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதுதான் கனகாவின் சோகமான வாழ்க்கை என்று செய்யாறு பாலு மன வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X