குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்... என இளவட்டங்களை அலையவிட்டவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. அறிமுகமான முதல் படத்திலே டாப்புக்கு போன இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காக்கிசட்டை, விஷாலுக்கு ஜோடியாக மருது, விஷ்ணு விஷால் ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபு ஜோடியாக வெள்ளக்கார துறை, அதர்வா ஜோடியாக ஈட்டி, ஜீவா ஜோடியாக சங்கிலி புங்கிலி கதவ தொற, பெங்களூர் நாட்கள், பென்சில் என அடுத்தடுத்து ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்தஸ்ரீ வித்யா சினிமாவில் இருக்கும் இடம் கூட தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார்.

அழகான நடிகை: இதுகுறித்து சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் யமுனா என்ற குறும்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது நான் கதாநாயகியை பார்க்க சென்று இருந்தேன் ஸ்ரீரம்யாவின் தங்கை தான் ஸ்ரீதிவ்யா. அவரை அப்போதே சினிமாவில் நடிக்க அழைத்தோம். ஆனால், அப்போது அவர் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
குடிப்பழக்கம்: முதல் படத்திலேயே ஸ்ரீ திவ்யா, சிவகார்த்திகேயனுக்கு ஈடு கொடுத்து நடித்து இருப்பார். சில பத்திரிக்கைகளில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு சாவித்ரி என்று எழுதி இருந்தார்கள். அந்த அளவிற்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்திருந்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியாக இருந்த இவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான் என்று இணையத்தில் செய்திகள் பரவியது.

இதெல்லாம் தேவையா: இது குறித்து விசாரித்த போது தான், நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டு கிரபிரவேசத்தில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டு இருக்கிறார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பெயர், புகழ், பணம் என அனைத்தும் வந்து விட்டதால், என்ன செய்வது என்றே தெரியாமல் போய்விடும், இந்த நேரத்தில் யாராக இருந்தாலும், சுயகட்டுப்பாடு மிக அவசியம் அதை ஸ்ரீதிவ்யா தவறவிட்டது தான் அவர் சினிமாவை விட்டு காணாமல் போக காரணம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை என சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அடுத்தடுத்த படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா காணாமல் போக, அந்த இடத்தை பிடித்து டாப்பில் வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











