Manisha Koirala - குடி பழக்கம் டூ விபசார ஒழிப்பு வரை.. மனிஷா கொய்ராலாவின் மறுபக்கம் தெரியுமா?
சென்னை: Manisha Koirala (மனிஷா கொய்ராலா) குடி பழக்கத்திலிருந்து மீண்ட மனிஷா கொய்ராலா விபசார ஒழிப்பு வரை செய்திருக்கிறார்.
நேபாளத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். கடந்த 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹிந்தியில் அவர் 1991ஆம் ஆண்டு சௌதாகர் என்ற படத்தின் மூலம் இண்ட்ரோ ஆகி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

தமிழில் அறிமுகம்: படங்களில் நடித்துக்கொண்டே ஒரு பக்கம் மாடலிங்கும் செய்துகொண்டிருந்த மனிஷா மணிரத்னத்தின் கண்களில் பட உடனடியாக தான் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து தனது நடிப்பு திறமையை பறைசாற்ற தொடர்ந்து தமிழிலும் பட வாய்ப்புகள் அமைய ஆரம்பித்தன.
முதல்வன், இந்தியன்: அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன், இந்தியன் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அனைவருக்குமே தெரிந்தது.தமிழில் அவருக்கு தொடர்ச்சியாக ஹிட் படங்கள் அமைந்தாலும் தனது கவனம் முழுவதையும் ஹிந்தியிலேயே வைத்திருந்தார். அதன் காரணமாக அங்கு பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்.
தமிழில் கடைசி படம்: தமிழில் அவர் கடைசியாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு முன்னதாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார். சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில்கூட, பாபா படம் தான் எனது கரியரையே போக்கிவிட்டது என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தது. சூழல் இப்படி இருக்க குணசித்திர நடிகையாக மாப்பிள்ளை படத்தில் ரீ என்ட்ரி கொடுத்ததோடு சரி அதன் பிறகு அவர் ஒட்டுமொத்தமாக தமிழை தலை முழுகிவிட்டார்.

கேன்சர்: பீக்கில் இருந்தபோது கோலிவுட்டிலிருந்து ஒதுங்கினாலும் ஹிந்தியில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அங்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒட்டுமொத்தமாக ஹீரோயினாக நடிக்கும் சூழல் மறைந்துபோனது. அதற்கு காரணம் மனிஷா கொய்ராலாவின் குடிப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும்தான் என பலர் சொல்வார்கள். அது பத்தாது என்று அவருக்கு கேன்சர் நோயும் வந்தது.
என்ன காரணம்?: இந்நிலையில் மனிஷா கொய்ராலா குடிப்பழக்கத்துக்கு அடிமையானதற்கான காரணத்தை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விவரித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மனிஷா கொய்ராலா ஒருவரை காதலித்துவந்தார். ஆனால் அந்த காதல் பாதியிலேயே முடிந்தது. அதனை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதன் காரணமாக குடிக்கும், புகைக்கும் அடிமையானார். அந்தப் பழக்கத்தால் பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது.

விக்ரம் மனைவி கவுன்சிலிங்: அதிலிருந்து அவர் மீள்வதற்கு நடிகர் விக்ரமின் மனைவிதான் கவுன்சிலிங் செய்தார். ஒருவழியாக மீண்ட மனிஷாவுக்கு புற்றுநோய் வந்தது. அதன் பிறகு அவர் நேபாளம் சென்றுவிட்டார். அங்கு புற்றுநோயிலிருந்து ஒருவழியாக மீண்ட அவர் மிகச்சிறந்த காரியம் ஒன்றை செய்தார். அது என்னவென்றால் சிறுமிகளை வைத்து நேபாளத்தில் நடந்த விபசாரத்தை முக்கால்வாசி ஒழித்தார். கிட்டத்தட்ட 100 புரோக்கர்கள் சட்டத்தின் கையில் சிக்குவதற்கு காரணமாக இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











