நடிகைன்னா உனக்கு கிள்ளு கீரையா? கொந்தளித்த ஹீரோயின்? விளாசிய செய்யாறு பாலு!
சென்னை: திருச்சி சூர்யாவை பாஜக, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அண்மையில் அவரை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியது. இதைத் தொடர்ந்து இவர், மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கும், நடிகை மீனாவிற்கும் தொடர்பு இருப்பது போல பேசி இருந்தார். இணையத்தில் இது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் செய்யாறு பாலு இது குறித்து பேசி உள்ளார்.
அதில்,அண்மையில் தான் மீனாவின் கணவர் இறந்தார், இந்த நேரத்தில் அவர் குறித்து அவருக்கு இரண்டாம் கல்யாணம் என்றும்,பெரிய நடிகரை காதலிக்கிறார் என்றும் தொடர்ந்து அவர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து நான் பேசக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், இந்த விஷயம் பற்றி பேசியே ஆகவேண்டும் என்று நிலைக்கு வந்துள்ளது என்றார்.

செய்யாறு பாலு: பாலாவின் சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போது நான், நடிகை அபிதாவை பேட்டி எடுக்க வீட்டுக்கு சென்று, அவரின் வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை, பின் கொஞ்சமாக கதவை திறந்து என்னை பார்த்துவிட்டு உள்ளே அழைத்தனர். ஏன் இப்படி பயம் என்று கேட்டதற்கு, யார் யாரோ வீட்டு கதவை தட்டுகிறார்கள், வீண் வம்பு செய்கிறார்கள் என்று இதனால் வெளியில் வரவே பயமாக இருக்கிறது என்றார். இதுபற்றி நான் பத்திரிக்கையில் எழுதிய பிறகு தான், நடிகர் சங்கர் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை கொடுத்தது. இப்படி சினிமாவில் ஒரு நடிகையாக வந்துவிட்டால் அவர்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இதுதான் காரணம்: அப்படி நடிகைகள் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் போது, நடிகைகள் குறித்து வரும் வதந்திகள் மேலும் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அண்மையில் திருச்சி சூர்யா, எல் முருகனையும், மீனாவையும் இணைந்து பேசி உள்ளார். இதற்கு காரணம் மத்திய அமைச்சர் எல் முருகன் கடந்த பொங்கலுக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருந்தார். இதில், மோடி, வானதி ஸ்ரீனிவாசன், மீனா, கலா மாஸ்டர் என பலர் கலந்து கொண்டனர். இதில் மீனா கலந்து கொண்டது பேசு பொருளானது. அதைத் தொடர்ந்து தான் தற்போது திருச்சி சூர்யா இந்த தகவலை கூறியுள்ளார்.
கிள்ளு கீரையா: அது போலத்தான் மீனாவிற்கும், விவாகரத்தான நடிகர் ஒருவருக்கும் திருமணம் என்கிற செய்தி பரவியது திருமணம் செய்து கொள்வதும் செய்து கொள்ளாததும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை இதில் தலையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. 30 ஆண்டுகளுக்கு முன், பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் நடிகைகள் பற்றி மிகவும் மோசமாக வதந்திகள் பரவியதை அடுத்து, நடிகை ஸ்ரீபிரியா நடிகைகள் என்றால் கிள்ளு கீரையா என பேட்டி கொடுத்து அனைவரையும் விளாசி இருந்தார்.
அவரின் அந்த பேட்டிக்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால், தற்போது சோஷியல் மீடியாவின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால், பலரும் நடிகைகள் குறித்து பல மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனி மனிதன் குறித்து பொய்யாகவும், தனக்கு தெரியாததை வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். தற்போது, யாராவது முன் வந்த விளாச வேண்டும் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











