Sangeetha Krish: தமிழ் சினிமாவில் வளர்ந்துட்டு.. சங்கீதா இப்படி பேசலாமா?.. செய்யாறு பாலு விளாசல்!
சென்னை: நடிகை சங்கீதா தனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும் என்று பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், செய்யாறு பாலு அவரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. இதையடுத்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதலே நிம்மதி படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சங்கீதா. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த சங்கீதா. உயிர், தனம், நேபாளி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.

பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த பிதாமகன் படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது குறிப்பிடத்தக்கது என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
பாடகருடன் திருமணம்: தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த சங்கீதா, பாடகர் கிரிஷ் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சங்கீதா, கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்திருந்தார்.
தெலுங்கு தான் பிடிக்கும்: சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை சங்கீதா அளித்த பேட்டியில், "எனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும். தற்போது தெலுங்கு படத்தில் தான் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதைப்பார்த்து, எவ்வளவு பேரு கோபப்பட்டாலும் அதுபற்றி எனக்கு கவலை இல்லை. தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை, தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு இந்த மனப்பான்மை வருவதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை." என பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
செய்யாறு பாலு விளாசல்: ரசிகா எனும் படத்தில் ஆரம்பத்தில் அறிமுகமானவர் தான் இந்த சங்கீதா. பல படங்களில் நடித்தும் இவருக்கு சினிமாவில் சரியான இடம் கிடைக்கவில்லை. கன்னடத்தில் தீப்தி எனும் பெயரிலும் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா துறையை அதிகம் பிடிக்கும் என்று சொல்ல அவருக்கு கட்டாயம் உரிமை உள்ளது. ஆனால், தமிழ் பிடிக்காது என்றும் தமிழில் தன்னை மதிக்கமாட்டார்கள் என பேசுவதும் ஏற்புடையதல்ல, பிதாமகன் படம் எல்லாம் அவருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்த படம் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக மாஞ்சோலை எனும் படத்தில் நடித்த ரசிகா தமிழ்நாட்டில் தான் வளர்ந்து நடிகையாக உருவானார். ஆனால், தமிழ் சினிமாவை பற்றி இப்படி கேவலமாக பேசுவது வளர்ந்த பின்னர், தெலுங்கு தான் மரியாதை கொடுக்கிறது என்றெல்லாம் பேசுவது ரொம்பவே தவறான விஷயம் என செய்யாறு பாலு கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











