வடை வடைன்னு வன்மத்த கக்கினாலும்.. ஜெயிலர் டாப் தான்.. ப்ளூ சட்டை மாறனுக்கு செய்யாறு பாலு பதிலடி!
சென்னை: சினிமா பிரபலங்களை தாண்டி விமர்சகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் தற்போது சண்டை சூடு பிடித்திருக்கிறது. ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்பி வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு சமீபத்திய பேட்டியில் சீனியர் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம், செய்யாறு பாலு மற்றும் மனோபாலா என வரிசையாக வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் பேச்சுக்கு அவர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவே இப்படி மாற்றி மாற்றி இவர்கள் போடும் சண்டையால் ரணகள பூமியாக மாறி வருகிறது.
அடையாறு ரவி என கிண்டல்: செய்யாறு பாலுவை அடையாறு ரவி என கிண்டல் செய்து ஏகப்பட்ட ட்வீட்களை போட ஆரம்பித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும், திருப்பூர் சுப்பிரமணியம், மனோபாலா விஜயபாலன் என அனைவரையும் வச்சு செய்து வருகிறார்.
ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து செய்யாறு பாலு பேசி வரும் நிலையில், அவரும் வடை சுட்டு வருகிறார் என வம்பிழுக்க தற்போது செய்யாறு பாலு பேசியுள்ள புதிய வீடியோவில் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி உள்ளார்.
ஜெயிலர் கலெக்ஷன் பெருசு: 72 வயதிலும் இளம் நடிகர்கள் பலரும் கற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு சரியான நேரத்தில் ஷூட்டிங் செல்வது, எத்தனை டேக் இயக்குநர் கேட்டாலும் புதுமுக நடிகர் போல நடித்துக் கொடுப்பது என நடித்து அசத்தி வரும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் யார் என்ன சொன்னாலும், மிகப்பெரிய வசூல் செய்திருப்பது மறக்க முடியாத உண்மை தான். விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூலை ஜெயிலர் நிச்சயம் தாண்டும் என செய்யாறு பாலு பேசியுள்ளார்.

வடை வடைன்னு வன்மத்த கொட்டினாலும்: ப்ளூ சட்டை மாறன் என்ன தான் ஜெயிலர் படத்தின் இமாலய வசூலை வடை வடைன்னு சொல்லி வன்மத்தை கொட்டினாலும் ஜெயிலர் வசூல் ஒன்றும் குறைந்து போய் விடாது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் போது வசூல் அதிகரித்து வருவது வாடிக்கைத் தான். அடுத்து லியோ படத்துக்கும் அதிக வசூல் வரும்.
ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், அதை விமர்சனம் செய்யலாம். ஆனால், அந்த படத்தையே காலி செய்து விடும் நோக்கில் நான்சென்ஸ் மாதிரி வன்மத்தை கக்கும் செயல்களில் சினிமாவை சேர்ந்தவர்கள் செயல்படக் கூடாது என செய்யாறு பாலு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











