Nayan: நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? ரஜினிக்கே சவால் விட்ட பொம்பள.. தாளித்து எடுத்த செய்யாறு பாலு!
சென்னை: நடிகை நயன்தாராவை சுற்றி கடந்த 6 மாதங்களாக சர்ச்சைகள் ஓடிக்கொண்டுதான் உள்ளது. இப்படி இருக்கும்போது, தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறினார். சமீபத்தில் அவர் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் எனவும், நயன்தாரா என அழைத்தால் போதும் எனக் கூறினார். இது தொடர்பாக பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நயன்தாராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டெஸ்ட். இந்த படத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோசன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. அண்மையில் நயன்தாரா தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் எனக் கூறினார். இது தொடர்பாக செய்யாறு பாலு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நயன்தாராவை யார் லேட் சூப்பர் ஸ்டார் என அழைத்தார்கள்? இவர்களே போட்டுக் கொள்வார்கள் அதன் பின்னர் இவர்களே நீக்குவார்களாம் என்பது போல உள்ளது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயசாந்தி தான். மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த போது, அவர் தனது பெயரை டைட்டில் கார்டு போடும்போது லேடி சூப்பர் ஸ்டார் என போட வேண்டும் எனக் கூறினார். ஆனால் இயக்குநர் வாசு மறுத்தார். அதன் பின்னர் இந்த பிரச்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தனது பெயருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இல்லாமல் டைட்டில் கார்டு போட சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார். அந்த அளவிற்கு ரஜினிக்கே சவால் விட்ட பொம்பள என்றால் அது விஜயசாந்தி தான்.
லேடி சூப்பர் ஸ்டார்: ஆனால் நயன்தாராவை இங்கு யாருமே லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கவில்லை. அப்படி இருக்கும்போது நயன்தாரா இப்போது தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் எனக் கூறியதற்கு ரசிகர்கள் மத்தியில் கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லை. அஜித் குமார் தன்னை அல்டிமேட் ஸ்டார், தல என்று எல்லாம் அழைக்க வேண்டாம் எனக் கூறினார். அப்போது அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் நயன்தாராவுக்கு அதுபோல் எதுவும் ஆகவில்லை. இவராகவே தனது பெயரை படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுக் கொண்டுள்ளார். அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது கூட, இயக்குநரிடம் சண்டைபோட்டு, தனது பெயருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுக் கொண்டாராம்.

அனுஷ்கா: மேலும், அனுஷ்கா நடிப்பில் அடுத்து தெலுங்கில் காட்டி என்கிற ஒரு படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் சூட்டப்படவுள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நயன்தாரா, இது தொடர்பாக அவர்களிடம் பேசி, லேடி சூப்பர் ஸ்டார் என போடக்கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு அவர்களோ, நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கிற்கு லேடி சூப்பர் ஸ்டார். நாங்கள் கட்டாயம் லேடி சூப்பர் ஸ்டார் என போடுவோம் எனக் கூறியுள்ளார்கள்.

கவன ஈர்ப்பு: அதற்கு நயன்தாரா தரப்பில் எப்படியும் அந்த படத்தை தமிழில் டப்பிங் செய்யத்தானே போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுள்ளார்கள். ஆனாலும், காட்டி படக்குழுவினர் உறுதியாக இருந்ததால்தான் நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது வெறுமனே கவன ஈர்ப்புக்காக மட்டும்தான்" என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











