Ramya Krishnan: நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்..வாழ்க்கை கொடுத்த ஐட்டம் டான்ஸ்!
சென்னை: படையப்பா படத்தில் நீலாம்பரியாக பட்டையை கிளப்பிய ரம்யா கிருஷ்ணன் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
40 வருடங்களாக முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்துவாங்கிவிடுவார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்:சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ரம்யா கிருஷ்ணன் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், சிறுவயதில் கதாநாயகியாக அறிமுகமான நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் முக்கியமானவர். எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும் போது 14 வயதில் வெள்ளைமனசு என்கிற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும், ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, அனைவரையும் இந்த பெண் யார் என்று கேட்க வைத்தது.
அடுத்தடுத்த படங்கள்: முதல் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால், அவரை பிரபலமாக்கிய திரைப்படம் என்றால் அது முதல்வசந்தம் படம் தான். இந்த படத்தில் இடம் பெற்ற ஆழம் அது ஆழம் இல்ல என்ற பாடல் ரம்யா கிருஷ்ணனை பட்டி தொட்டி எங்கும் தெரியவைத்தது. அதன் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

வாழ்க்கை கொடுத்த ஐட்டம் டான்ஸ்: இதன் பிறகு தான் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தோரோட்டமா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். முதலில் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடவே மாட்டேன் என்று மறுத்த ரம்யா கிருஷ்ணனை, சமாதானப்படுத்தி படத்தின் முழுக்கதையையும் சொல்லிய பிறகுதான் அந்த பாடலுக்கு ஆடவே சம்மதித்தார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில ஹிட்டடித்து ரம்யா கிருஷ்ணனுக்கு சினிமாவில் மறுவாழ்க்கை கொடுத்தது. ஆனால், தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி அலுத்துப்போன ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பக்கம் சென்றார்.
காதல் திருமணம்: அங்கு, கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயம், சந்திரலேகா போன்ற படங்களில் கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சியின் மேல் காதல் ஏற்பட்டதோடு அவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே யூகிசேதுவுடன் திருமணம் நடந்து அது விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அவரை திருமணம் செய்து கொண்டார்.
படையப்பா நீலாம்பரி: இதன்பிறகு தான் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இந்த கதையை ரஜினிகாந்திடம் சொன்னதும், நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதே ரஜினி தான். இதை பல முறை ரம்யா கிருஷ்ணன் பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படம் ரம்யா கிருஷ்ணனை தென் இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதேபோல, பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து உலகம் ழுழுவதும் பிரபலமானார்.


Click it and Unblock the Notifications











