சூப்பர் சிங்கர் பாடகி ராஜலக்‌ஷ்மி ஜீன்ஸ் போட்டா தப்பா? வயிற்று எரிச்சல் தான் காரணம்!

சென்னை: விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர். அண்மையில் ராஜலட்சுமி ஜீன்ஸ் போட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், செய்யாறு பாலு ராஜலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

சூப்பர் சிங்கர் ஷோ மூலம் கிடைத்த வரவேற்பை அடுத்து, சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்ற என்ன மச்சான், புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி என் சாமி உட்பட பல பாடல்களை பாடிய ராஜலட்சுமி செந்தில். 'சைலன்ஸ்' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் 'லைசென்ஸ்' திரைப்படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் ராஜலட்சுமியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Cheyyaru Balu support to Super Singer Rajalakshmi

பாடகி ராஜலட்சுமி: திரைப்படங்கள், பாடல்கள், கச்சேரி செய்து வரும் ராஜலட்சுமி அண்மையில், அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, ஆங்கிலத்தில் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், உனக்கெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் கேக்குதா என மிகவும் கடுமையான வார்த்தையால் அவரை வெளுத்து வாங்கி அவரை உருவ கேலி செய்தார்கள்.

அடிப்படை அறிவு இல்லாதவர்கள்: இதற்கு பதிலடி கொடுத்த ராஜலட்சுமி ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன், பொது இடத்தில் பேசினால் தான் பயம் போகும் என்பதால், அந்த வீடியோவில் பேசினேன். அதற்கு மோசமாக கமென்ட் போட்டுட்டு இருக்காங்க, அடிப்படை அறிவு இல்லாதவங்கத்தான் இப்படி பேசுவாங்க. என்னோட உடை குறித்தும் பேசி இருந்தாங்க. எது எனக்கு சரியா இருக்கோ அதை நான் போடுறேன். அதுல என்ன இருக்கு? எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன், அந்த கமென்ட்டுகளை பார்த்துவிட்டு நான் அதே உடையில் நிறைய வீடியோக்களை பதிவிட்டேன் என்று சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

Cheyyaru Balu support to Super Singer Rajalakshmi

வேதனையா இருந்தது: பாடகி ராஜலட்சுமியின் சரியான பதிலடி கொடுத்தது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ராஜலட்சுமி அண்மையில் அமெரிக்காவிற்கு சென்று ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு வீடியோ வெளியிட்டது குறித்து மோசமான வார்த்தையால் திட்டினார்கள். முகம் தெரியாத ஆயிரம் சைக்கோக்களின் மோசமான வார்த்தைக்கு ராஜலட்சுமியும் பதில் சொன்னது தான் வேதனையாக இருந்தது.

வயிற்று எரிச்சல்: கணவன் மனைவி இருவரும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஊர் ஊராக நாட்டுப்புற பாட்டை பாடிக்கொண்டு இருந்தார்கள். நாட்டுப்புற பாட்டின் மீது இருந்த ஆர்வத்தால், பல அவமானத்தை தாண்டி இன்று முன்னேறி இருக்கிறார்கள். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் தயவு செய்து அவமானப்படுத்தாதீர்கள். இவை அனைத்தும் பொறாமையால், வயிற்று எரிச்சலால் வரும் கருத்து என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X