சிவகார்த்திகேயன் மீண்டுவிட்டாரா? மாவீரன் படத்தில் தைரியமாக அரசியல் பேசி இருக்கிறார்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் தைரியமாக அரசியல் பேசிஇருக்கிறார் என்று செய்யாறு பாலு படம் குறித்து பேசி உள்ளார்.
மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாவீரன்.
வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு : இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மாவீரன் படம் குறித்து பேசி உள்ளார். அதில், மடோனா அஸ்வின் மண்டேலா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தால், அடுத்து அவர் இயக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்ன வென்றால், மண்டேலா படத்தில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம், ஒரு வாக்கு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை படம் முழுக்க சொல்லி அதில் இரண்டு தேசிய விருதையும் பெற்றதால், இந்த படத்தில் என்ன கருத்து இருக்கும், அதில் சிவகார்த்திகேயன் எப்படி நடித்து இருப்பாரு என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
முதல் பாதி சூப்பர் : இந்த படத்தின் கதை என்ன வென்றால், சென்னையில் ஒரு முக்கியமான இடத்தில் குடியிருக்கும் குடிசைவாசிகளுக்கு, எங்கையோ ஒரு இடத்தில் வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. அதன் பின் நடக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை, முதல் பாதி மடோனா அஸ்வின் படமாகவும், இரண்டாம் பாதி பக்கா சிவகார்த்திகேயன் படமாகவும் இப்படம் இருக்கிறது.

அரசியல் பேசிய சிவகார்த்திகேயன்: அதுமட்டுமில்லாமல் படத்தின் பல காட்சிகளில் கொடி, புகைப்படம், உண்மை சம்பவம் என அடுத்தடுத்து படத்தின் பல இடங்களில் அரசியல் பேசி இருக்கிறார். அரசியலையே படம் முழுக்க பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், இடையேயில சூப்பர் மேன் கதையாக மாறிவிடுகிறது. அதே போல படுபயங்கரமான வில்லனாக மிஸ்கின் இருப்பார் என்று பார்த்தால், அவருடைக காட்சியும் எடுபடவில்லை.
மனதில் ஆதங்கம்: ஒட்டுமொத்தமாக மாவீரன் படத்தின் தூணாக சிவகார்த்திகேயன் தான் இருக்கிறார். இப்படி ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்தும் அதை இயக்குநநர் சரியாக பயன்படுத்தவில்லையே என்ற மனதில் ஆதங்கம் ஏற்படுகிறது. படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு இரண்டாம் பாதியில் நன்றாக தெரிகிறது என்ன மாவீரன் படம் குறித்து செய்யாறு பாலு விரிவாக பேசினார்.


Click it and Unblock the Notifications











