சித்தார்த்தின் சில்மிஷம்.. 3 நடிகைகளுடன் கிசுகிசு.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: நடிகர் சித்தார்த், கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்த போட்டோவை ஷேர் செய்து, விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
பாய்ஸ் படத்தில்: அதில், நடிகர் சித்தார்த் பாய்ஸ் படம் வெளியான போது அவர் தெலுங்கில் படுபீக்கில் இருக்கிறார். எந்த பக்கம் போனாலும், சித்தார்த்தின் பேச்சுத்தான் அடிப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த நேரத்தில் தான் செய்தியாளர் சந்திப்பில் ஏடாகூடமாக ஒரு கேள்விக்கு பதில் சொல்ல ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அவருக்கு எதிராக திரும்பியது. இதனால், சித்தார்த் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

தெலுங்கு வாரிசுகளின் சூழ்ச்சி: இதற்கு காரணம் தெலுங்கில் நான் வளர்வது பிடிக்காமல் தெலுங்கு வாரிசு நடிகர்கள் செய்த சூழ்ச்சி என இதற்கு விளக்கம் கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு என மாறி மாறி சித்தார்த் நடித்து வரும் சித்தார்த். எந்த தெலுங்கு உலகம் இவரை வெளியில் அனுப்பியதோ, அந்த ஊரின் மாப்பிள்ளையாகப் போகிறார் சித்தார்த். அண்மையில் சித்தார்த், அதிதி ராவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
பாய்ஸ் படத்தில் வாய்ப்பு: சினிமா மீது இருந்து ஆர்வத்தால் கும்பகோணத்தில் இருந்து வந்த சித்தார்த், மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஷங்கர் தனது பாய்ஸ் படத்தில் முன்னா கேரக்டரில் நடிக்க ஒருவரை தேடிக்கொண்டு இருந்தார். இப்படி ஷங்கரின் கண்ணில் பட்ட சித்தார்த் தான் அந்த படத்தில் நடித்தார்.
முதல் மனைவி: பாய்ஸ் படத்திற்கு பிறகு பிரபலமான சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. இதையடுத்து, சமந்தாவுடன் சேர்ந்து சித்தார்த் படம் நடித்த போது இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. இதற்கு எல்லாம் முன்பு சித்தார்த்திற்கு மேக்னா என்பருடன் திருமணம் நடந்து அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனால், சித்தார்த்தை பிளேபாய் என பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.
அதிதி ராவுடன் திருமணம்: ஒரே படத்தில் சித்தார்த்திற்கு படவாய்ப்பே இல்லாமல் போனதால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் சித்தா படத்தை தயாரித்து நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது அதிதி ராவை திருமணம் செய்ய இருக்கிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரகசிய காதல்: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதியும் 2021-ம் ஆண்டு வெளியான 'மகா சமுத்திரம்' என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமண நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சி என பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.
முதல் கணவர்: நடிகை அதிதி ராவ் தனது 21 வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, அதிதி ராவின் முதல் கணவர், சத்யதீப் மிஷ்ரா, மசாபா குப்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் நடிகை குப்தாவின் ஒரே மகள் தான் மசாபா இவர், பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











