முதுகில் குத்திய ஹீரோ.. வலியை வெளியில் காட்டிக்கொள்ளாத டேனியல்.. பிரபலம் பகிர்ந்த வேதனை!

சென்னை: வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 48 வயதே ஆன அவரது மரணம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், செய்யாறு பாலு அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் ஒரு ஆகச்சிறந்த மனிதர். இறந்த பிறகும் தான் வாழவேண்டும் என்று தனது கண்களை தானமாக கொடுத்து இருக்கிறார். வாலிபால் பிளேயரான டேனியால் பாலாஜிக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. நல்ல நல்ல நடிகர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது. இதற்கு காரணம் டென்ஷன் என பல காரணம் சொல்லப்படுகிறது.

Cheyyaru balu talks about Daniel Balaji death

திறமையான நடிகர்: நல்ல திறமையான நடிகராக இருந்த டேனியால் விஜய், தனுஷ், கமல் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக கமலுக்கு வில்லனாகவே நடித்து விட்டார். இவருக்கு பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவருடன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். டேனியல் பாலாஜி தான் தன் படத்தில் வில்லன் என்ற தெரிந்ததும் பதறிப்போன அந்த பெரிய ஹீரோ அவரை வில்லனாக போடக்கூடாது என்று கேட்டுள்ளார். இதையடுத்து அந்த பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். இந்த விஷயத்தை டேனியல் பாலாஜி யாரிடமும் சொல்லியது இல்லை.

அங்கீகாரம் கிடைக்கவில்லை: இதற்கு காரணம் நம்மைவிட இவர் நன்றாக நடித்துவிடுவான் என்கிற பயம் தான். அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்கக்கூடியவர் டேனியல் பாலாஜி. ஆனால், சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அவரின் வலியாகவே இருந்தது. இவருக்கு மட்டும் நல்ல வாய்ப்புகள், சரியான வாய்ப்பு, அங்கீகாரம் கிடைத்து இருந்தால், அவர் தென்னிந்தியாவின் நானா பட்டேக்கராக இருந்து இருப்பார். ஆனால், நடக்காமல் போய்விட்டது தான் வேதனை இதுபோன்றவர்களை தயவு செய்து காப்பாற்றுக்கள் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசினார்.

வில்லனாக:சித்தி தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் பாலாஜி அந்த சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்தால், டேனியல் பாலாஜியாக மாறினார். இதைத் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அமுதன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பெரும் புகழை அடைந்த டேனியல் பாலாஜி, அத்திரைப்படத்தில் தன் வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றுக்காக இன்றும் அறியப்படுகிறார். அவர் மறைந்தாலும் தன் படங்களின் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X