சில்மிஷ சிகாமணிகள்.. மோகன்லால் தப்ப முடியாது.. செய்யாறு பாலு சொன்ன தகவல்!

சென்னை: ஹேமா கமிஷன் வெளியானதைத் தொடர்ந்து பல நடிகைகள் துணித்து வந்த புகார் அளித்து வரும் நிலையில், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா செய்துவிட்டார்கள். பூதாகரமாகி இருக்கும் இந்த பிரச்சனை குறித்து சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி உள்ளார்.

அதில், மலையாள சினிமா பல வெற்றிப்படத்தை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தாலும், அங்கு இருக்கும் பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து, அவர்களை துன்புறுத்தியது ஒவ்வொன்றாக தற்போது தான் வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. 2017ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், ஒரு நடிகையை காருக்குள் வைத்து வன்கொடுமை செய்தார். இது உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல முன்னணி நடிகைகள் எல்லாம் குரல் கொடுத்தார்கள்.

mohanlal cheyyaru balu hema committee

செய்யாறு பாலு: அதன் பிறகுதான் ஓய்வு பெற்ற ஒரு பெண் நீதிபதி தலையில் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்துகிறது. இதில் பல பெண்கள் நேரில் வந்து ஆஜராகி புகார் கொடுக்கிறார்கள். இதைதொடர்ந்து 2019ம் ஆண்டு ஹேமா கமிஷன் 239 பக்கம் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. இதை வெளியிட்டே ஆக வேண்டும் என்று தைரியமாக கேட்டவர் பார்வதி தான்.

சிக்கிய டாப் நடிகர்கள்: இந்த சர்ச்சையில் மலையான சினிமாவில் உள்ள டாப் 5 ஹீரோக்கள், டாப் 15ல் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், மேனேஜர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் பெயரும் இதில் அடிபடுகிறது. திரையில் நாம் பார்த்து பிரம்மித்துப்போனவர்களா இப்படி ஒரு அசிங்கத்தை செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும் போது ச்சே என்னடா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

சர்ச்சையில் சிக்கிய மோகன் லால்: இதில், ஹேமா கமிஷன் கமிட்டியில் புகார் அளித்தவர்களின் பெரும்பாலானவர்கள் மோகன் லால் பெயரைத்தான் கூறி இருக்கிறார்கள். அங்கு இருக்கும் மீடியாக்கள் மோகன்லாலை வெளுவெளுவென வெளுத்து வருகிறார்கள். லால் சேட்டா… லால் சேட்டா என்று கொண்டாடப்பட்டு வந்த இவரா இப்படி என்று அனைவரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு தகுந்த மாதிரி மோகன் லாலும் மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினா செய்துவிட்டார். இந்த விவகாரத்தில் பரபரப்பாக பேசிவிட்டு, அப்படியே கிடப்பில் போடாமல் இருந்தால் சரி என மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X