லீக்கான ஹனி ரோஸின் ஆபாச போட்டோ.. கோடிஸ்வரன் கூப்டா போகணுமா? விளாசிய செய்யாறு பாலு!
சென்னை: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகையாக இருந்தால், கூப்பிடுவீர்களா, ஆபாச கமெண்ட் அடிப்பீர்களா என ஹனி ரோஸ் கேட்டுள்ளார்.
இது குறித்து பேசி உள்ள செய்யாறு பாலு, ஹனி ரோஸ் பத்து ஆண்டுகளுக்கு முன் விக்ராந்த் நடித்த முதல்கனவே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு பேசப்படவில்லை. ஆனால், படத்தின் ஹீரோயின் அம்சமாக இருந்ததால், ஹனி ரோஸ் பிரபலமாக பேசப்பட்டார். தமிழ் சினிமாவில் அமலா பால் போல, ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்க நிலையில் முதல் படம் தோல்வியடைந்ததால் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டார்.

ஹனி ரோஸ்: அதைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவா நடித்த சிங்கம் புலி என்ற படத்தில் நடித்தார், அந்த படமும் தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை என பெயரை பெற்ற இவர், இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விட்டார். இதையடுத்து, 60 வயதான பாலைய்யா நடித்த வீரசிம்மா ரெட்டி படத்தில் அவரின் அம்மாவாக நடித்திருந்தார் ஹனி ரோஸ். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதையெல்லாம் மீறி பல விமர்சனம் வந்த போதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தவர் தான் ஹனி ரோஸ். வீரசிம்மா ரெட்டி படத்தால் ஹனி ரோசுக்கு என்று ஆந்திராவில் தனி ரசிகர் கூட்டமே உருவானது.
கைது செய்யப்பட்டார்: தற்போது ஹனி ரோஸ் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது பாலியல் ரீதியாக புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பாபி செம்மனூர் ஹனி ரோஸின் facebook தளத்தில் தொடர்ச்சியாக, பல மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் நொந்து போன ஹனி ரோஸ், உங்கள் கடையின் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்ற கோபத்தில் எப்படி பதிவிடுகிறீர்களா என கேட்டு இருந்தார். அந்த பதிவை தொடர்ந்து, 30 பேர் ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான போட்டோக்களை சித்தரித்து வெளியிட்டு, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதனால் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு மேலாக நான் தூங்கவில்லை என எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
காரணம் என்ன: ஹனி ரோஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் நகைக்கடை அதிபர் செம்மனூர் பாபி மீது வழக்குப்பதிவு செய்து அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், மிகப்பெரிய தொழிலதிபரான பாபி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் வெறும் ஆபாச கமெண்ட் அடித்தது மட்டும் இருக்காது. அதற்கு பின்னால் வேறு ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்கும் என தெரிகிறது. அது குறித்து காவல்துறையும், ஹனி ரோசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஒரு நடிகையாக இருந்தால் கோடீஸ்வரர்கள் அழைத்தால் போக வேண்டுமா என்றும், நடிகை குறித்து மோசமான கமெண்ட் அடிப்பது, மோசமான புகைப்படத்தை பகிர்ந்து கேலி செய்வீர்களா என்றும் ஆவேசமாக கேட்டிருக்கும் ஹனி ரோஸ், அம்மாநில முதல்வர் பிரனாய் விஜயனுக்கும், மாநில டிஜிபிக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











