பாரதி கண்ட புதுமை பெண்..அப்பாக்கு தப்பாமல் இருக்கும் ஸ்ருதி.. செய்யாறு பாலு என்ன சொல்லவராரு!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பாவுக்கு தப்பாத பெண்ணாக பிறந்து இருக்கிறார் என்று சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவரது படங்கள் வரவில்லையென்றாலும் மற்ற மொழிகளில் இவரது படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
இவரது நடிப்பில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போது இரண்டு படங்கள் வெளியானது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரைய்யா படத்திலும் நடித்திருந்தார். தற்போது கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் கடந்த வாரம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

இணையத்தில் ஆக்டிவ்: எவ்வளவுதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிக்கு சென்றால், நான் நிதானமாக இருக்கமாட்டேன். நண்பர்களுடன் குடிப்பதை பெருதும் விரும்பினேன். ஆனால், நான், ஒரு போதும் போதைப்பொருளை பயன்படுத்தியது இல்லை. அந்த 8 ஆண்டுகள் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது, தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கிறேன். இப்போது அதைப்பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பேசி இருந்தார்.
செய்யாறு பாலு பேட்டி: மதுப்பழக்கம் குறித்து ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக பேசியது சோஷியல் மீடியாவில் பேசு பொருளானதை அடுத்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அது குறித்து பேசி உள்ளார். அதில், ஒரு நடிகை இப்படி சொல்வதற்கே தைரியம் வேண்டும். ரஜினிக்கூட தனது 72 வயதுக்கு மேல்தான் குடிப்பழக்கம் இருந்தது அதில் இருந்து மீண்டு வந்தேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் உறவில் இருப்பதையே வெளிப்படையாக சொல்லக்கூடியவராக இருப்பதால், எனக்கு குடிப்பழக்கம் இருந்தது என்பதை தைரியமாக சொல்லி இருக்கிறார்.
பாரதி கண்ட புதுமைப் பெண்: இந்த தைரியத்திற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் தான், அவர் எப்போதுமே எனது இரண்டு மகள்களையும் ஆண் பிள்ளைகள் போலத்தான் வளர்த்து இருக்கிறேன் என்று கூறுவார் அதே போலத்தான், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு பேருமே மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகி விட்டார்கள். உண்மையில் கமல் தனது மகளை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் உருவாக்கி இருக்கிறார்.
கமலிடம் பிடித்த விஷயம்: அதே நடிகர் கமல்ஹாசனிடம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு நோ கமெண்ட்ஸ் பதிலே சொல்லமாட்டார். அனைத்து கேள்விக்கும் தடாலடி பதில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார். அவரிடம் மழுப்பலான பதிலே இருக்காது, அவரின் இந்த குணம் பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதே போலத்தான் ஸ்ருதி ஹாசனும் அப்பாவுக்கு தப்பாமல் , நான் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன், குடிப்பழக்கம் எனக்கு இருந்தது என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். நான் இப்படித்தான், நான் எப்படிப்பட்டவள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என்பதில் ஸ்ருதி உறுதியாக இருக்கிறார்.
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி: அதேபோலத்தான் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டு நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டு ஓடிபோனார்கள். ஆனால், ஸ்ருதி ஹாசன் மட்டும் நான் நடிக்கிறேன் என்று முன் வந்தார். இதை பாலகிருஷ்ணாவே பேட்டி ஒன்றில் பெருமையாக பேசி இருந்தார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.... என்ன கிசு கிசு வேண்டுமானாலும் வரட்டும் நான் இப்படித்தான் என்பதில் ஸ்ருதி ஹாசன் தெளிவாக இருக்கிறார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











