சமந்தாவை தூக்கி போட்ட நாக சைதன்யா.. அவரின் மனநிலை என்ன? செய்யாறு பாலு வேதனை!

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், செய்யாறு பாலு இது குறித்து வீடியோவில் பேசி உள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகனான நாக சைதன்யா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

Samantha Sobhita Dhulipala NagaChaitanya

நடிகை சமந்தா: விவாகரத்திற்கு அதன்பிறகு இருவருமே தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியான நிலையில் நேற்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் நாகா மற்றும் சோபிதாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

செய்யாறு பாலு: இவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து பேசி உள்ள செய்யாறு பாலு, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா, இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்பு தான். இவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த போது இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை, வேறு நடிகருடன் தொடர்பு, ஜீவனாம்சத்திற்காக விவாகரத்து செய்கிறார் என்றெல்லாம் சமந்தா குறித்து படுமோசமான விமர்சனங்கள் முன் வந்தன.

இப்படி செய்யலாமா: இப்படி வந்த எல்லா விமர்சனத்தையும் சமந்தா எதிர்கொண்டார். இவர் மீது விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, அரியவகை நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நேரத்தில் நாக சைத்தன்யா திருமணம் குறித்த அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஒன்றாக சுக துக்கத்தை பகிர்ந்து இருப்பார்கள். அப்படி இருக்கும் போது சமந்தா நோயுடன் போராடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நாகசைத்தன்யா இப்படி நடந்து கொள்ளலாமா, அவர் ஒரு சக மனிதனாக நடந்து கொள்ளவில்லை என்று பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X