குழந்தை பெத்துக்க முடியுமா? முடியாதா? நெப்போலியன் மகனை இப்படியா விமர்சிப்பது.. செய்யாறு பாலு பேட்டி!
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வரும் நிலையில், சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, திருமணம் குறித்து இப்படியா விமர்சனம் செய்வது என்று பேட்டி ஒன்றில் கேட்டுள்ளார்.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், பிறந்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது, தசை சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர் இதற்காக திருநெல்வேலியில் இயற்கை முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அது பலன் அளிக்காமல் பத்து வயதில் தனுஷால் நடக்க முடியாமல் போனது. தனது மகனைப் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக திருநெல்வேலியில் ஒரு மருத்துவமனையை கட்டி உள்ளார். இதையடுத்து, மகனுக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க சென்ற நெப்போலியன் குடும்பத்தோடு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

நெப்போலியன் மகனுக்கு திருமணம்: தற்போது தனுஷுக்கு 25 வயதாகும் நிலையில் அவருக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் தனுஷ்க்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். தனுஷ் இந்தியா வரமுடியாததால், அவர்களின் திருமணம் வீடியோ காலில் நடைபெற்றது.
கடும் விமர்சனம்: தற்போது சோஷியல் மீடியாவில் தனுஷுக்கு திருமணம் செய்வது தவறு என்றும், அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக்கலாமா என்று பலவிதமான பேச்சுக்கள் இணையத்தில் பரவின. குறிப்பாக டாக்டர் காந்தராஜ், இந்த நோய் உள்ளவர், 12 அல்ல 18 வயதிலேயே இறந்துவிடுவார்கள். தனுஷ் 25 வயது வரை வாழ்ந்ததே பெரிய சாதனை என பேசி இருந்தார்.
இப்படியா விமர்சிப்பது: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள செய்யாறு பாலு, தனது மகனுக்கு இப்படி ஒரு நோய் என்று தெரிந்ததுமே நெப்போலியன் குடும்பமே உடைந்துப்போய் விட்டது. தனது மகனுக்காக சினிமா, அரசியல் என எல்லாத்தையும் விட்டு விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். தனது மகனுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டி உள்ளார். ஒரு அம்மா, அப்பாவான இவர்கள் தனுசை பார்த்துக்கொள்ளலாம் ஆனால், ஒரு மனைவி கணவனை பார்த்துக்கொள்வது போல வராது என்பதற்காக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தை விமர்சிக்கலாமா? தனுஷால் நடக்க முடியாவிட்டாலும் அவர், தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார். ஐடி கம்பெனியை அவர் தான் நிர்வகித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











