அம்பானி வீட்டு கல்யாணம்.. ரஜினிகாந்த் குத்தாட்டம் போட இதுதான் காரணம்..பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கிறது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமணம். ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்திருக்கிறார். கடந்த மூன்று நாட்களாக நடைபெறும் இந்தத் திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் திருமண விழாவில் ரஜினிகாந்த் போட்ட குத்தாட்டம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் முடிந்திருக்கும் சூழலில்; இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்தார். ராதிகாவும் மும்பையை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண். அவர் மருத்துவ துறையில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது காதலுக்கும் இரண்டு பேரின் வீட்டாரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். அதனையடுத்து ஆனந்த் - ராதிகாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

கோலாகல கொண்டாட்டம்: திருமணம் முடிவானதும் இந்தியாவிலும், பிரான்ஸிலிருந்து இத்தாலிவரை செல்லும் ஒரு சொகுசு கப்பலிலும் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. ப்ரீ வெட்டிங்கிற்கே சொகுசு கப்பலா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார்.
மூன்று நாட்கள் திருமணம்: அதனையடுத்து ஆனந்த் அம்பானியின் திருமணம் மூன்று நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி திருமண விழா, ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத் நிகழ்வு, ஜூலை 14ஆம் தேதியான இன்று மங்கல் உத்சவ் நிகழ்வு நடைபெற்றது. இதில் உலக விஐபிக்கள் முதல் உள்ளூர் விஐபிக்கள்வரை கலந்துகொண்டார்கள். தமிழ் சினிமாவிலிருந்து ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டோர் குடும்ப சகிதமாக கலந்துகொண்டார்கள்.
வாட்ச் கிஃப்ட்: மேலும் பாலிவுட் திரையுலகமும் திரண்டு சென்று கலந்துகொண்டது. இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய கை கடிகாரத்தை முகேஷ் அம்பானி பரிசாக வழங்கினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். அதேபோல் அட்லீயோ தனது மனைவியின் ஜாக்கெட்டில் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்த வாசகத்தை காட்டி பலரது கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் நடனம்: இப்படி உலகம் முழுவதும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்தான் பேசு பொருளாகியிருக்கிறது. ஆனால் அதில் இன்னொரு பேச்சுபொருளாக மாறியது என்னவென்றால் ரஜினிகாந்த் போட்ட நடனம். எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் பொதுவாக அமைதியாகவே இருக்கும் ரஜினிகாந்த், அம்பானி வீட்டு கல்யாணத்தில் இப்படி நடனம் ஆடினாரே என்று பலரும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். அதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
செய்யாறு பாலு பேட்டி: அதேசமயம் அவர் நடனம் ஆடியதற்கு விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இவ்விவகாரம் குறித்து பேசுகையில், "அம்பானி வீட்டு கல்யாணம் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். ரஜினிகாந்த் ஆடிய நடனம் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. பணக்கார வீட்டு கல்யாணம் என்பதால் ரஜினி இப்படி நடந்துகொண்டார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அதில் உண்மையில்லை. முகேஷ் அம்பானி ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர். சில காலத்துக்கு முன்பு முகேஷ் அம்பானியின் மனைவி மும்பையில் ஒரு கலாசார மையத்தை தொடங்கினார். அந்த தொடக்க விழாவுக்கு உலகம் முழுவதுமிலிருந்தும் விஐபிக்கள் வந்திருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரெ பிரபலம் ரஜினிகாந்த் மட்டும்தான். அவ்விழாவில் ரஜினிக்கு நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பக்கத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. முகேஷ் அம்பானியோ வேறு யார் பக்கத்திலும் சென்று அமராமல் நேராக ரஜினியின் அருகில்தான் வந்து அமர்ந்தார். அந்த அளவுக்கு ரஜினி மீது அம்பானிக்கு அன்பு அதிகம். அந்த அன்பின் வெளிப்பாடுதான் ரஜினி போட்ட குத்தாட்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications











