Leo Success Meet - ரஜினியை தாக்கி பேசிய ரத்னகுமார்?.. செம டோஸ் விட்ட விஜய்..?

சென்னை: Leo Success Meet (லியோ சக்சஸ் மீட்) லியோ சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்த்தை ரதன்குமார் தாக்கி பேசியதாகவும் அதற்கு விஜய் டோஸ் விட்டதாகவும் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை படம் திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் ரீதியாக படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று முன் தினம் மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Cheyyaru balu Talks about Rathnakumar Speech and Vijay Reaction in Leo Success meet

குட்டி ஸ்டோரி: நிகழ்ச்சியில் பேசிய விஜய், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க" என்றார்.

சூப்பர் ஸ்டார்: மேலும், மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலகநாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான். தல என்றால் ஒருவர்தான். நான் தளபதியாக இருக்கிறேன். மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்வேன் என பட்டாசாக பேசினார்.அவரது இந்த பேச்சை அடுத்து சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது.

ரத்னகுமார் பேச்சு: இதற்கிடையே விழாவில் பேசிய இயக்குநர் ரத்னகுமார் பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ரஜினிகாந்த்தை தாக்கி பேசியதாக கருதப்பட்டது. இந்நிலையில் ரத்னகுமார் அப்படி பேசியதற்கு விஜய் டோஸ் விட்டதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

செய்யாறு பாலு பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விஜய் வேறு ஒரு பிளானோடு லியோ சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தார். ஆனால் ரத்னகுமார் அப்படி பேசியதை விஜய்யே எதிர்பார்க்கவில்லை. அவர் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. விஜய்க்கு ஐஸ் வைக்க அப்படி பேசினாரா இல்லை கூட்டத்தை பார்த்த ஆர்வக்கோளாறில் அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.

ரத்னகுமாரின் பேச்சுக்கு அரங்கத்தில் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் அதிகமாகவே இருந்தன. ஆனால் விஜய் ரத்னகுமாரிடம் ஏன் இப்படி பேசினீர்கள் என டென்ஷனோடு பேசி முதல்ல கிளம்புங்க என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி அதற்கு பிறகு விஜய் ரத்னகுமாரை பார்க்கவே இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X