வெற்றியை எதிர்பார்க்கல..சிவகார்த்திகேயனை திருச்சிக்கே பேக் செய்ய பார்த்தார்கள்..பிரபலம் கொடுத்த ஷாக்

சென்னை: சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். வசூலிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயன் குறித்து பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சிலரை அச்சப்படுத்தியிருக்கிறது. தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக அமரனை கொடுத்திருக்கிறார் அவர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுடனான சண்டையின்போது உயிர் நீத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி படம் உருவாகியிருந்தது.

sivakarthikeyan amaran

எப்படி இருக்கு படம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக எஸ்கே நடிப்பில் வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாகவே ரசிகர்கள் கூறினார்கள். ராணுவ ஜானரில் வந்த படங்களில் இப்படம் கொஞ்சம் வித்தியாசப்படுவதாகவும்; சண்டை காட்சிகளைவிடவும் காதல் காட்சிகள் கலங்கடித்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

சிவா, சாய் பல்லவி: படத்தின் இரண்டு தூண்களாக தாங்கியிருப்பது சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும்தான். ராணுவ அதிகாரியாக மிடுக்கோடு சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் புது எனர்ஜியை ஊட்டின. கண்டிப்பாக இந்தப் படம் அவரது கரியரில் முக்கியமான படம்தான். சாய் பல்லவியை பற்றி சொல்லவே வேண்டாம். சின்ன கேப் கிடைத்தாலும் சிக்சர் அடிக்கும் அவர்; அமரனில் அடித்தது எல்லாமே சிக்சர்தான். சொல்லப்போனால் சிவகார்த்திகேயனைவிடவும் ஒருபடி மேலேதான் நின்றார் சாய் பல்லவி.

வசூலில் மிரட்டும் அமரன்: படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டு பத்திரம் வாசித்தார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளரான கமல் ஹாசனும் மிகப்பெரிய பாராட்டை கொடுத்தார்.இப்படி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில் சிவா குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

பேக் செய்ய பார்த்தார்கள்: செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், "சிவகார்த்திகேயனின் இந்த வெற்றியை குறிப்பிட்டோர் எதிர்பார்க்கவில்லை. அவரது வளர்ச்சியை தடுத்து அவரை பேக் செய்து திருச்சிக்கே அனுப்பப்பார்த்தார்கள். ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. இப்போது பாருங்கள் எஸ்கேவை ரஜினி, கமல் என பலரும் பாராட்டுகிறார்கள். ஒருவரது வளர்ச்சியை தாமதம் வேண்டுமானால் படுத்தலாம். ஒருபோதும் தடுக்கவே முடியாது. அதுதான் எஸ்கேவின் சினிமா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X