யார் இந்த கெனிஷா?..ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாம்..முதல் கணவருக்கு என்னாச்சு?..பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற ஆர்த்தியுடன் பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். அந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை கிளப்பியது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டார் ரவி. ஏற்கனவே அவருக்கும் கெனிஷாவுக்கும் இருந்த உறவால்தான் ஆர்த்தியும் ரவியும் பிரிந்தார்கள் என்று ஓடிய பேச்சுக்கு ரவியின் இந்த செயல்பாடு பலத்தை கொடுத்துவிட்டது. ரவி அவ்வாறு செய்ததைத் தொடர்ந்து ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டார். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். ஏற்கனவே ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அவர்களது பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்று முதலில் பலரும் சொன்னார்கள். ஆனால் கெனிஷாவுடன் ரவி வந்ததை பார்த்த பலரும் ஒருவேளை ரவிதான் இந்த பிரிவுக்கு முதல் புள்ளியை வைத்திருப்பாரோ என்ற சந்தேகத்தை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஆர்த்தியும் தனது பங்குக்கு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனையடுத்து திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆர்த்திக்கு ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆர்த்தியின் அறிக்கை: ஆர்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், "எனது மௌனத்தை நான் கலைக்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்காக இந்த விஷயத்தில் கடந்த ஒருவருடமாக நான் மௌனத்தை விரதமாகவே இருந்துவருகிறேன். அதனால் நான் பலகீனமானவள் என்பது இல்லை. எனது பேச்சைவிடவும் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை முக்கியம் என்று கருதிதான் அப்படி மௌனமாக இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பழி சொற்கள், வசைகள் அனைத்தையுமே நான் தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும், நியாயமும் இருந்தது. இருந்தாலும் தந்தை மற்றும் தாய் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனது குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்.

நாடகங்கள், காட்சிகள் வேறு: உலகம் இன்று பார்க்கும் நாடகங்களும், காட்சிகளும் வேறு. நடந்த உண்மையே வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதல் மற்றும் நம்பிக்கையோடு கைகோர்த்து நடந்த ஒரு மனிதனின்று எனது கைகளை மட்டுமில்லை தன்னுடைய பொறுப்புகளையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்.கடந்த பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை நான் எனது தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் குழந்தைகள் சிந்தும் கண்ணீரை எனது கைகள் மட்டும்தான் துடைத்துக்கொண்டிருக்கின்றன. இப்போது அவர் புதிய உறவை உருவாக்கிக்கொண்டார். அதனால் அவரது கண்களுக்கு பழைய சுவர் வெறும் செங்கல் சுவர் போல் காட்சியளிக்கிறது.

Cheyyaru Balu Talks about Unknown Side From Kenisha And Ravi Mohan Issue

அந்த வாக்குறுதியும் பறந்துவிட்டது: குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்று சொன்ன அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. நான் அந்தக் காதலுக்காக வருத்தப்படவில்லை. அதேசமயம் அதை பலவீனமாக எடுத்துக்கொண்டதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. எனது குழந்தைகளுக்கு இன்று 14 மற்றும் 10 வயது ஆகிறது. அவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பும் உறுதியும் முக்கியம். இன்று நடந்துகொண்டிருக்கும் சட்ட விவகாரத்தையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்பட்டாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் என அனைத்தும் எங்கள் நெஞ்சில் காயங்களாக இருக்கின்றன.

ஏன் பேசுகிறேன் தெரியுமா: நான் ஒரு மனைவியாகவோ அல்லது குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ நான் பேசவில்லை. குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டும்தான் நான் குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்ய தவறிவிட்டால் நானும் அவர்களை கைவிட்டது மாதிரி ஆகிவிடும். எனது வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவி சாய்த்துதான் ஆக வேண்டும். ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில்தான் இருக்கிறது. சட்டம் முடிவு செய்யும்வரை அந்த பெயரில்தான் நீடிக்கும். அதேபோல் என்னை ரவியின் முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம். அந்த முடிவை சட்டம் எடுக்கும்வை அமைதியாக இருப்போம். நான் என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக போராடுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

செய்யாறு பாலு வீடியோ: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தன்னுடைய யூடியூப் சேனலில், "ரவி - கெனிஷா பற்றி நான் ஏற்கனவே பேசியபோது ரவியின் ரசிகர்கள் வந்து எனக்கு சாபம் எல்லாம் கொடுத்தார்கள். கெனிஷாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று என்னிடமே ரவி மோகன் ஃபோன் செய்து கூறினார். அவர் கெனிஷா மட்டுமில்லை யாருடன் வேண்டுமானாலும் அந்தத் திருமணத்துக்கு வந்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரிமையும், விருப்பமும்தான். அது உண்மையும்கூட. அதேநேரத்தில் ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு படிப்பவர்களின் மனதை கனக்கத்தான் வைத்திருக்கிறது. விவாகரத்து இன்னும் உறுதியாகவில்லை அந்த நேரத்தில் ஜோடியாக வந்திருக்கக்கூடாது என்று நினைக்கிறார் ஆர்த்தி.

அப்பாவாக இருக்க வேண்டும்: முக்கியமாக எனக்கு கணவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் எனது குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க வேண்டும் என்று ஆர்த்தி நினைக்கிறார்.இது எவ்வளவு பெரிய விஷயம். ரவியின் இரண்டாவது மகனுக்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இருக்கிறது அப்பாவை தாண்டி வளர்ந்துவிடுவேன் என்றும் வெளிநாட்டில் சென்று நடிப்பு தொடர்பாக படிக்கப்போகிறேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அந்த பையனின் மனநிலை என்னவாக இருக்கும். முக்கியமாக சினிமாக்காரங்களே இப்படித்தான் என்று வெறுக்கும் அளவுக்கு சென்றிருப்பார். கெனிஷாவுடன் ரவி வந்த வீடியோவை ரவியின் மகனுடைய நண்பர்கள் காண்பிப்பார்கள். அதெல்லாம் அந்த பையனுக்கு பெரிய மன உளைச்சலை கொடுக்கும்தானே.

யார்தான் இந்த கெனிஷா: கெனிஷாவுக்கு ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு திருமணம் நடந்ததாகவும்; அந்தக் கணவர் மறைந்துவிட்டதாகவும் நாம் விசாரித்தவரையில் ஒரு சோர்ஸ் சொன்னது. கெனிஷா பணக்காரராகவோ ஏழை பெண்ணாகவோகூட இருக்கலாம். பெங்களூரில் விவேக் நகரில் சாதாரண வீட்டு பெண்ணாகத்தான் அவர் பிறந்ததாக சொன்னார்கள். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் திருமணமான ஒரு ஆணுடைய வாழ்க்கையில் எதற்காக வர வேண்டும். எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவரை விட்டுத்தரமாட்டார்.சினிமா பிரபலங்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்கள் என மொத்தம் 200 பேரை மாலத்தீவுக்கு ஐசரி கணேஷ் அழைத்து செல்லவிருக்கிறார். அதில் ரவி - கெனிஷாவும் அடக்கம். இதெல்லாம் ஆர்த்திக்கு எவ்வளவு பெரிய மன வேதனையை கொடுக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X