குட்டி கதை சொல்லுகிற விஜய்யா? 2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது.. பாராட்டிய பிரபலம்!
சென்னை: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அம்பேத்கரின் நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சத்துரு பெற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய விஜய், நூறு ஆண்டுக்கு முன்பே நியூயார்க் சென்று புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர் இருந்தார்.

அந்த மாணவனின் சாதியை கூறி படிக்க மறுப்பு தெரிவித்து நீ எல்லாம் ஏன் பள்ளிக்கு வர, படிச்சி என்ன செய்யப்போற என்றெல்லாம் அவரை படிக்க விடாமல் தடுத்தது. அதனை தாண்டி அவர் பள்ளி சென்றால், சக மாணவர்களுடன் அமர முடியாது, தண்ணீர் கூட குடிக்க முடியாது. அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால், அதனை எல்லாம் எதிர்த்து அவரின் வைராக்கியம் அவரை படிக்க வைத்தது. அந்த மாணவர் தான் அண்ணல் அம்பேத்கர். மேலும், அரசியல் கட்சிகள் குறித்து, கூட்டணி கூட்டணி என்று கட்சிகள் அலைந்து கொண்டு இருப்பது பற்றியும் அதிரடியாக பேசி இருந்தார்.
இணையத்தில் இவரின் பேச்சு பாராட்டப்பட்டு வரும் நிலையில், செய்யாறு பாலு, விஜய்யின் பேச்சு குறித்து பேசி உள்ளார். விக்ரவாண்டியில் விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் அவர் எழுதிக் கொண்டு வந்து பேசினார். இசைவெளியீட்டு விழாவில் பேசுவது போல பேசினார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. அதன் பிறகு தற்போது தான், அவர் ஒரு அரசியல் தலைவராக முதல் முதலாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு முன்னாடி இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்லும் விஜய், இரண்டு ஒரு வார்த்தைகளை மட்டுமே பேசி செல்லும் விஜய், நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டு நான் மிகவும் வியந்து போனேன்.
விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராகிவிட்டார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆகிவிட்ட நிலையில் இனிமேல் சம்பிரதாயத்துக்கெல்லாம் பேசினால் சரியாக வராது என்று முடிவு எடுத்துவிட்டு பேச ஆரம்பிக்கும்போதே சிக்சர் அடித்துவிட்டார். இனிமேல், அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியை இந்திய ஜனநாயக உரிமை தினமாக கொண்டாட வேண்டும் என்று என் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு, இதை இந்திய ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அதிரடியாக பேசினார்.
விஜய் இந்த விழாவில் என்ன பேசி போடுகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புயல், மழை வெள்ளம் குறித்தும் அதானி லஞ்ச, ஊழல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக மத்திய அரசு குறித்தும், மாநில அரசு குறித்தும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்து பேசி விட்டார். அது மட்டுமல்லாமல் இந்திய ஒன்றிய அரசு ஜனநாயக முறையில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துகிறார்களா? என்றும் மணிப்பூர் சம்பவம் குறித்தும் மறைத்து எதையும் பேசாமல் நேரடியாக தாக்கி பேசினார். விஜய் இப்படி எல்லாம் பேசுவாரா, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பாரா என்று நினைத்தவர்களுக்கு விஜய் சரியாக பதிலடி கொடுத்துவிட்டார். 2026 தேர்தல் களம் இப்போதே சூடு பிடித்துவிட்டது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











