காசுக்காக கட்சி தொடங்கினாரா விஜய்?.. தவெக மாநாட்டை விட தளபதி 69ல் பிஸி.. செய்யாறு பாலு பேச்சு!
சென்னை: வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக விஜய்யின் முதல் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய் கொடியை அறிமுகப்படுத்தும் விழாவில் கூட கொடிக்கான விளக்கத்தைக் கூட மாநாட்டில் கொடுக்கிறேன் எனக் கூறிவிட்டார்.
கோட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் வெற்றி விழா என எதையுமே நடத்தாமல் அப்படியே அமைதியாக விட்ட விஜய் தளபதி 69 படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தவெக மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புஸ்ஸி ஆனந்த் தான் நடத்தி வருகிறார். மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கூட விஜய் பங்கேற்காமல் தளபதி 69 படத்தின் பூஜையில் பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விஜய்யின் அரசியல் பார்வை குறித்தும் தவெக முதல் மாநாடு குறித்தும் பல தகவல்களை செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் கூறியுள்ளார்.
தயாராகும் தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 5 லட்சம் பேர் அந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் பார்க்கிங்கிற்கு மட்டுமே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். 800 மீட்டருக்கு ரேம்ப் வாக் செய்ய மாநாட்டு மேடையில் இருந்து மாநாடு முடியும் இடம் வரைக்கும் தனியாக நீள்மேடை அமைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரு ஸ்டேடியத்தில் எப்படி ரசிகர்கள் இருக்கும் இடம் வரை சென்று அவர்களை சந்தித்து பேசினாரோ அதே போல மாநாட்டில் தொண்டர்களை அவர்கள் அருகிலேயே சென்று சந்தித்து பேசப் போகிறாராம்.
மழை பாதிப்பு இருக்குமா?: தவெக மாநாடு நடைபெறும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், அன்றைய தினம் மக்கள் துணிகளை எடுக்க கடைக்கு செல்வார்களா? தவெக மாநாட்டில் பங்கேற்க வருவார்களா? என்கிற கேள்விகள் ஒரு புறமும் மழை அல்லது புயல் போன்ற இயற்கை பேரிடர் வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அனைத்துக்கும் தயார் நிலையிலேயே விஜய்யின் தவெக மாநாடு நடக்கும் என்றும் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் - பாஜக தலைவர்கள்: ராகுல் காந்தி, பவன் கல்யாண், புதுச்சேரி முதல்வர், பிரகாஷ் ராஜ், விஷால் என காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் நிகழ்ச்சியில் பக்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் விஜய்யின் அரசியல் கொள்கை என்ன? மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காசுக்காக கட்சி ஆரம்பித்தாரா?: நடிகர் விஜய் சினிமாவில் படங்களில் நடிக்கும் போதே சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பித்து சொந்த காசை போட்டு படம் எடுக்க மாட்டார் என்றும் ஒவ்வொரு படத்துக்கும் கோலிவுட்டில் ஹாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகும் விஜய் காசுக்காகத்தான் கட்சி ஆரம்பித்தார் என்கிற விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், அதற்காக எல்லாம் விஜய் தவெக கட்சியை ஆரம்பிக்கவில்லை. உறுதியாக மக்களுக்கு நல்லது செய்யும் முடிவுடன் தான் அவர் இறங்கியிருக்கிறார். தளபதி 69 படத்தை சீக்கிரமே முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக 2026 தேர்தலை விஜய் சந்திப்பார் என செய்யாறு பாலு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











