பிரேம்ஜி கல்யாணத்துக்கு யுவன் ஏன் வரவில்லை.. தம்பிங்க மேல என்ன வெறுப்பு?

சென்னை: கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார் கங்கை அமரன். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இளைய மகன் பிரேம்ஜி பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார்.

திருமண வயது வந்தும் பேச்சுலராக இருந்து பிரேம்ஜிக்கு திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சென்னை 28 படத்தில் நடித்த ஜெய், வைபவ், மிர்ச்சி சிவா கலந்து கொண்டனர். இதில் இளையராஜா, யுவன் கலந்து கொள்ளவில்லை இதுகுறித்து செய்யாறு பாலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

premji amaran ilayaraja yuvan shankar raja

செய்யாறு பாலு : முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு ஒருவழியாக திருமணமாகி விட்டது. அவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தனர். அவர் ஒரு நடிகையை திருமணம் செய்ய போகிறார், பாடகியை திருமணம் செய்ய போகிறார் என்றெல்லாம் செய்தி வந்தது. இந்த செய்தியை மறுத்த வெங்கட்பிரபு அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் இதற்காக அவருக்கு பெண் பார்க்கும் வேலை நடந்து கொண்டு இருக்கு என்றார். இதையடுத்துதான் பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை வெளியானதும் அவர் மீடியாவில் செய்தியாளராக இருக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியானது.

20 வயது வித்தியாசம்: ஆனால், மணப்பெண் இந்து, சேலத்தை சேர்ந்தவர் என்றும் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்க்கும் சாதாரண பெண் தான் இந்து. அந்த வங்கியில் தான், பிரேம்ஜி கணக்கு வைத்து இருந்தார் என்றும், வங்கி வேலை விஷயமாக சென்ற போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, பின் பெரியவர்கள் சேர்ந்து பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் பிரேம்ஜிக்கு 45 வயது, இந்துக்கு 25 வயது என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட இருவருக்கும் 20 வயது வித்தியாசம், காதல் என்று வந்துவிட்டால் இதெல்லாம் சாதாரணம் தான்.

அவர் மனிதரே இல்ல: இந்த திருமணத்தில் இளையராஜா கலந்து கொள்ளாதது வேதனையாக இருக்கு அவர் சிறந்த இசையமைப்பாளர் ஆனால், அவர் சிறந்த மனிதரா என்றால் அது தான் இல்லை. அண்மையில் காப்பு உரிமை பிரச்சனை வந்த போது, முதல் ஆளாக குரல் கொடுத்தவர் கங்கை அமரன் தான். இளையராஜாவின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் தம்பிகள் தான். அதனால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்தது. ஆனால், அதை எல்லாம் மறந்து விட்டு இளையராஜா இப்படி நடந்து கொள்கிறார்.

யுவன் வரல: பெரியவர்களுக்குள் என்ன பிரச்சனையாக இருந்தாலும், வெங்கட்பிரபு, கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா என அனைவரும் அன்போடுதான் பழகி வருகிறார்கள். ஆனால், இந்த திருமணத்திற்கு யுவன் வந்து இருக்க வேண்டும். அவர், துபாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னத்தான் இருந்தாலும், தம்பியின் திருமணத்திற்கு வந்து இருக்கலாம். ஆனால் தம்பி மீது என்ன வெறுப்பு என்று தெரியவில்லை. இன்னும் சிலர் அவர் மதமாறிவிட்டதால், கோவிலில் நடந்த திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X