இது செம்ம ஐடியாவா இருக்கே.. வெறும் குலாப் ஜாமுன் சாப்பிட்டே 11 கிலோ எடையைக்கூட்டிய பிரபல நடிகர்!

மும்பை: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் கதையை மையப்படுத்தி தீபிகா படுகோன் சபாக் எனும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மஸாய் வெறும் குலாப் ஜாமுன் சாப்பிட்டே தனது எடையை 11 கிலோ வரை அதிகரித்த ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள சபாக் படம் வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது.

விக்ராந்த் மஸாய்

விக்ராந்த் மஸாய்

பாலிவுட்டின் திறமையான முன்னணி நடிகராக விக்ராந்த் மஸாய் வலம் வருகிறார். பாலிவுட் படம் என்றாலும், வெப் சீரிஸ் என்றாலும், தனது ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விக்ராந்த் மஸாய், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள சபாக் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் போட்ட கண்டிஷன்

இயக்குநர் போட்ட கண்டிஷன்

சபாக் படத்தின் இயக்குநர் மேக்னா குல்சார், விக்ராந்த் மஸாயை இந்த படத்தில் புக் செய்வதற்கு முன்பு அவரிடம் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுள்ளார். அலோக் தீக்‌ஷித் கதாபாத்திரம் மிகவும் குண்டான கதாபாத்திரம் என்றும், 2 மாதத்தில் 10 கிலோ எடையை அதிகரிக்க முடிந்தால், நீங்கள் இந்த படத்தில் நடிப்பீர்கள் எனக் கூறியுள்ளார்.

சவாலுக்கு ரெடி

சவாலுக்கு ரெடி

மேக்னா குல்சாரின் கண்டிஷனை தெரிந்து கொண்ட நடிகர் விக்ராந்த் மஸாய், அந்த சவாலுக்கு தான் ரெடி என்பதை தெரிவித்தார். உடல் எடையை அதிகரிப்பது குறித்து பல மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்துள்ளார்.

குலாப் ஜாமுன் டயட்

குலாப் ஜாமுன் டயட்

ஆனால், கடைசியில் விக்ராந்த் மஸாய்க்கு கை கொடுத்தது என்னவோ குலாப் ஜாமுன் டயட் தான். தினமும் 8 குலாப் ஜாமுன்கள் மற்றும் சில சமோசாக்களை சாப்பிட்டு தனது எடையைக் கூட்டியுள்ளார்.

2 மாதத்தில்

2 மாதத்தில்

தினசரி 8 குலாப் ஜாமுன்களை சாப்பிட்டு தனது உடல் எடையை அதிகரித்து வந்த விக்ராந்த் மஸாய், சரியாக 2 மாதத்தில் தனது உடல் எடையில் 11 கிலோவை அதிகரித்து தனது சவாலில் சாதித்தார். பின்னர், இயக்குநரிடம் சென்று படத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடித்துள்ளாராம்.

எத்தனை கிலோ

எத்தனை கிலோ

64 கிலோ எடையில் இருந்த விக்ராந்த் மஸாய், சபாக் திரைப்படத்திற்காக 2 மாதத்தில் 11 கிலோ வரை தனது எடையை கூட்டி மொத்தம் 75 கிலோ எடையுடன் தொந்தி வைத்த இளைஞராக இந்த படத்தில் நடித்துள்ளார். நடிப்புக்காக சிரத்தை எடுக்கும் வெகு சில நடிகர்களில் விக்ராந்த் மஸாயும் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Read more about: chhapaak சபாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X