தொடரும் சோகம்.. சுஷாந்த் சிங் ராஜ்புத் படத்தில் நடித்த நடிகை அபிலாஷா கொரோனாவால் உயிரிழப்பு

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சிச்சோரே படத்தில் நடித்த அபிலாஷா பாட்டிலும் கொரோனா பாதிப்பால் காலமானார்.

மராத்தி மற்றும் பாலிவுட் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர் அபிலாஷா பாட்டில்.

நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு ஏகப்பட்ட திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும் பலியாகி வரும் நிலையில், நடிகை அபிலாஷாவின் மரணம் திரைத்துறையை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடரும் மரணங்கள்

தொடரும் மரணங்கள்

கடந்த ஆண்டு முதல் திரைத்துறைக்கு என்ன ஆனதோ என தெரியவில்லை. தொடர்ந்து மரண செய்திகளாகவே கேட்டு வருகின்றன. கொரோனா பரவல் இந்தியாவில் சுனாமி போல தாக்கி வரும் நிலையில், நாடு முழுவதும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், அவர்களின் உறவினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் சோகம் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

அபிலாஷா மரணம்

அபிலாஷா மரணம்

பிரபல மராத்தி நடிகையும் பாலிவுட் படங்களில் நடித்தவருமான அபிலாஷா பாட்டீலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி காலாமானதாக அவருடன் நடித்த சக நடிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகை அபிலாஷாவின் மரண செய்தி மீண்டும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சுஷாந்த் சிங் படத்தில்

சுஷாந்த் சிங் படத்தில்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சிச்சோரே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிலாஷா. மேலும், அக்‌ஷய் குமாரின் குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்கனியா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

நடிகை அபிலாஷாவின் இழப்பு பாலிவுட் திரையுலகிற்கு மற்றுமொரு பேரிழப்பாகவும் பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என அயராது உழைத்து வந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என ஏகப்பட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எச்சரிக்கையுடன் இருங்க

எச்சரிக்கையுடன் இருங்க

தொடர்ந்து பிரபலங்கள் கொரோனாவால் உயிரிழப்பதும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவிப்பதாகவுமே தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக மாறி உள்ளது. மிகவும் பாதுகாப்புடன் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்றும் முகக் கவசம், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X